உலகின் டாப் கல்வி நிறுவனங்கள்.. லிஸ்டில் 22 தமிழகத்தை சேர்ந்தவை.. அண்ணா பல்கலைக்கழகம் எங்கே தெரியுமா
டெல்லி: உலகின் டாப் பல்கலைக்கழகங்களின் லிஸ்டை டைம்ஸ் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவில் இருந்து மொத்தம் 91 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனை டைம்ஸ் உயர் கல்வி - Times Higher Education அமைப்பு உலகின் டாப் பல்கலைக்கழகங்கள் குறித்த லிஸ்டை வெளியிடும். டிச்சீங், ஆராய்ச்சி தரம், தொழில்துறை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த லிஸ்டை உருவாக்கியுள்ளனர்.

இதில் இந்தியாவில் இருந்து மட்டும் மொத்தம் 91 பல்கலைக்கழகங்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு வெறும் 75 பல்கலைக்கழகங்கள் மட்டுமே லிஸ்டில் இருந்த நிலையில், இந்த முறை அது 91ஆக உயர்ந்துள்ளது.
முதலிடம் யாருக்கு: இந்த லிஸ்டில் முதல் இடத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இருக்கும் நிலையில், 3ஆவது இடத்தில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் 4ஆவது இடத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கிறது. இந்த மூன்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் ஆகும். 5ஆவது இடத்தில் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இருக்கிறது.
இதில் டாப் 25 இடங்களில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 16 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அடுத்து பிரிட்டனில் இருந்து 4 பல்கலைக்கழகங்கள் இந்த லிஸ்டில் இருக்கிறது. சீனாவில் இருந்து 2 பல்கலைக்கழகங்கள் இருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்து, கனடா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து தலா ஒரு பல்கலைக்கழகங்கள் இந்த லிஸ்டில் இருக்கிறது.
இந்திய பல்கலைக்கழகம்: இந்தியாவைப் பொறுத்தவரை இந்த லிஸ்டில் பெங்களூரை சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் (IISc) முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த இது 2017ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் முதலிடத்தை இந்திய அறிவியல் கழகம் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.. அதேபோல சர்வதேச அளவிலும் இந்த கல்வி நிறுவனம் டாப் 250க்குள் நுழைந்துள்ளது. இந்த ரேங்கிங்கை கடந்த நான்கு ஆண்டுகளாக ஐஐடிக்கள் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்த லிஸ்டில் இந்தியா தற்போது நான்காவது சிறந்த பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக மாறியுள்ளது. அதாவது இந்த லிஸ்டில் அதிக பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டு இந்தியா இதில் ஆறாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு டாப்: மேலும், இந்த லிஸ்டில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து 91 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 51 பல்கலைக்கழகங்கள் தென்மாநிலங்களைச் சேர்ந்தவையாகும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இதில் 22 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்து தான் இந்த லிஸ்டில் அதிக பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்: இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கேரளாவின் கோட்டயத்திலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் 501-600 ரேங்கில் உள்ளது. அடுத்து 601-800 ரேங்கில் இருக்கும் பெரும்பாலான இந்தியப் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும். அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், மற்றும் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
அதேபோல 800-1000 ரேங்கில் தென்மாநிலங்களில் இருந்து 6 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கலசலிங்கம் அகாடமி ஆஃப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை உள்ளன. அடுத்தடுத்த ரேங்குகளிலும் பல தமிழ் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications