“ஹே.. யூ?” எலான் மஸ்க்கின் ட்விட்டரில் கேலியாக மீம் போட்ட மார்க்.. 11 வருசத்துல இதான் முதல் முறை!
டெல்லி: ட்விட்டருக்கு போட்டியாக 'த்ரெட்ஸ்' எனும் சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்திய கையோடு ட்விட்டரில் ஒரு மீமை பதிவிட்டுள்ளார் மார்க் ஸுக்கர்பெர்க். இதுதான் கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு ட்விட்டரில் மார்க் வெளியிடும் பதிவு.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய பிறகு, வருமானத்தை அதிகரிக்க பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரில் ப்ளூ டிக் வெரிஃபிகேஷனுக்கு சந்தா கட்டும் முறை, ஒரு நாளைக்கு இவ்வளவு ட்வீட்களை தான் பார்க்க முடியும் என்ற வரம்புகளை நிர்ணயித்துள்ளார்.

அறிமுகமானது த்ரெட்ஸ்: இதனால், பெரும்பாலான ட்விட்டர் பயனாளர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் மெட்டா நிறுவனம், ட்விட்டருக்குப் போட்டியாக 'த்ரெட்ஸ்' செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியானது ஓரளவுக்கு ட்விட்டரை ஒத்திருக்கிறது.
மெட்டா சி.இ.ஓ மார்க் ஸுக்கர்பெர்க்கின் கூற்றுப்படி, த்ரெட்ஸ் ஏற்கனவே 4 மணி நேரத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ஈர்த்துள்ளது. த்ரெட்ஸ் விரைவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் முக்கிய பொது உரையாடல் பயன்பாடாக மாறும் என்றும் மார்க் கணித்துள்ளார்.
மார்க் கிண்டல்: மெட்டாவின் ட்விட்டர் போட்டியாளரான த்ரெட்ஸை அறிமுகப்படுத்திய மெட்டா சி.இ.ஓ மார்க் ஸுக்கர்பெர்க், ட்விட்டரில் ஒரு மீம் பதிவிட்டுள்ளார். 11 ஆண்டுகளுக்கும் மேலாக ட்விட்டரில் எந்த ஒரு பதிவும் செய்திராத மார்க், இன்று த்ரெட்ஸை அறிமுகம் செய்த கையோடு, ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கை கேலி செய்து பதிவிட்டுள்ளார்.

ஸ்பைடர்மேனும், ஸ்பைடர்மேன் உடையணிந்த வேறொருவரும் ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டும் வகையிலான பிரபலமான மீமை மெட்டா சிஇஓ மார்க் ஸுக்கர்பெர்க், ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ட்விட்டர் ஆப்பின் 'க்ளோன்' போலவே தாங்கள் 'த்ரெட்ஸ்' ஆப்பை களத்தில் இறக்கியுள்ள நிலையில், இந்த கிண்டலான மீமை பதிவிட்டுள்ளார் மார்க்.
முன்னதாக, ட்விட்டரை த்ரெட்ஸ் ஓவர்டேக் செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மார்க் ஸுக்கர்பெர்க், "இதற்கு சிறிது நேரம் எடுக்கும், ஆனால் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் ஒரு பொது உரையாடல் செயலி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ட்விட்டருக்கு இதைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை அவர்கள் திறம்படக் கையாளவில்லை. த்ரெட்ஸ் மூலம் அதைச் செய்ய முடியும் என நம்புவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications