சிவப்பு நிற சேலை.. வெட்க சிரிப்பு! குஷ்புவின் டிபியை பார்த்து மார்க்கண்டேய கட்ஜுவுக்கு வந்த சந்தேகம்
டெல்லி: சிவப்பு நிற புடவை அணிந்து கொண்டு ட்விட்டரில் டிஸ்பிளேபுகைப்படம் வெளியிட்ட நடிகை குஷ்புவிடம் எந்த ஷாம்புவை பயன்படுத்துகிறீர்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார். இது ட்விட்டர் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
1980, 90களில் பலரது கனவு கன்னியாக இருந்தவர் குஷ்பு சுந்தர். சின்னத்தம்பி படத்தில் இவரது அழகை பார்த்து மயங்காதவர்களே இல்லை என சொல்லலாம். இத்தனை அழகு இல்லாமலா குஷ்புவுக்கு கோயில் கட்டினார்கள்.
அப்படிப்பட்ட குஷ்பு தற்போது 50 வயதிலும் அழகாக இருக்கிறார் என்றால் எத்தனை பெரிய விஷயம். அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்திருந்தார். ஆனால் அதில் உடல் பருமனாக இருந்தார். இதையடுத்து என்ன மாயம் செய்தாரோ மந்திரம் செய்தாரோ தெரியவில்லை.

20 கிலோ குறைந்த குஷ்பு
படார் என 20 கிலோ குறைந்து குஷ்புவின் மகள்களுக்கே சகோதரி போல் உள்ளார். இத்தனை கொள்ளை அழகில் இவர் காட்சியளிப்பதை பார்த்தால் மீண்டும் ஹீரோயினாக ஒரு ரவுண்ட் வரலாம் போல!. திடீரென எடை குறைந்ததால் பலர் குஷ்புவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டதாக பதிவு செய்து வந்தனர்.

முற்றுப்புள்ளி
இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், என் உடல் எடையை நானே வொர்க் அவுட் செய்து குறைத்தேன். எனக்கு எந்த உடல்நல பாதிப்பும் இல்லை. எனக்கு என்ன ஆயிற்றோ என கவலை கொண்ட அனைவருக்கும் நன்றி. நான் அடிக்கடி போட்டோ எடுத்து போடுவதற்கு காரணமே என்னை பார்த்து இம்ப்ரஸ் ஆகி யாராவது 4 பேர் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் அதுவே எனக்கு வெற்றி என குறிப்பிட்டிருந்தார்.

குஷ்புவிடம் உடல் எடை குறைப்பு குறித்த கேள்வி
மேலும் சில சேனல்களுக்கு பேட்டி அளித்த குஷ்புவிடம் உடல் எடை குறைப்பு குறித்து கேட்ட போது என் வீட்டில் எல்லாருமே 6 அடிக்கு இருக்கிறார்கள். நான் மட்டும்தான் குள்ளமாக இருக்கிறேன். ஒரு பேமிலி போட்டோ எடுத்தால் கூட நன்றாக இல்லை. அதனால் ஒல்லியானால், அட்லீஸ்ட் கொஞ்சம் ஹைட்டாக தெரிவோம் என்பதால்தான் எனது உடல் எடையை குறைத்தேன் என தெரிவித்திருந்தார்.

டிவிட்டரில் போட்டோ
குஷ்பு அவ்வப்போது தனது போட்டோக்களை ட்விட்டரில் அப்லோடு செய்து கொண்டே இருப்பார். அந்த வகையில் அவர் சிவப்பு நிறத்தில் புடவை அணிந்து கொண்டு தலை குனிந்தபடியே வெட்கத்துடன் சிரிக்கிறார். தலை முடியை விரித்தபடி முன்பக்கம் விட்டுள்ளார். உங்கள் கஷ்டங்களை போக்க சிரிப்பு ஒன்றே சிறந்த வழி என கமென்ட் போட்டுள்ளார்.

கட்ஜு கேள்வி
இந்த புகைப்படத்தையே தனது ட்விட்டர் டிபியாகவும் வைத்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தில் அழகாக இருக்கிறீர்கள் என கமென்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு , குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நடக்கும் பிரச்சினைகள், சம்பவங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதையே கட்ஜு வழக்கமாக கொண்டிருக்கிறார். அதிலும் தமிழகம் தொடர்பான கருத்துகளில் ஜெயலலிதா இறந்த சம்பவம், ஜல்லிக்கட்டு பிரச்சினை, ரஜினிகாந்த் விவகாரம் என்பன குறித்தும் கட்ஜு பேசியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த போது கட்ஜு, வறுக்கும் வாணலியிலிருந்து நெருப்பிற்கு செல்கிறது தமிழகம் என விமர்சித்திருந்தார் கட்ஜு.












Click it and Unblock the Notifications