பெரிய திருப்பம்.. இந்து திருமண சட்டம்.. எப்படி மணமுடித்தால் செல்லும் தெரியுமா? உச்சநீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்து திருமண சட்டப்படி வழக்கறிஞர்கள் முன்பு நடைபெற்ற திருமணம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூரில் வைத்து ஒரு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணின் பெற்றோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் முன் நடந்த திருமணம் செல்லாது என்றது.

Marriage before lawyers legally acceptable as per hindu Marriage act: Supreme Court orders

மேலும்ம் மனுதாரருக்கு சுயமரியாதை திருமணம் நடந்ததாக சான்றளித்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் மூலமாக விளக்கம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் இதுபோன்ற திருமணம் ஏதாவது நடந்ததாக சான்றிதழ் வழங்கினால் அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

மதுரை உயர் நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து இளவரன் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திரபத் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் இளவரசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இரு இந்துக்கள் உறவினர்கள் முன்னிலையில், நண்பர்கள் பிற நபர்கள் முன்னிலையில் நடைபெறுவதுதான் திருமணம். அதைத்தான் இந்து திருமண சட்டம் குறிப்பிடுகிறது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கறிஞர்கள் தனிப்பட்ட முறையில் அதாவது தொழில் முறையின்றி தனிப்பட்ட முறையில் நடத்தி வைக்கும் இதுபோன்ற சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்கள் செல்லும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+