டெல்லியில் எம்பிக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ.. விரைந்த தீயணைப்பு வாகனங்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பிடி மார்க் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பானது கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற எம்பிக்களுக்காக திறந்து வைக்கப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் இன்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீ அணைப்புத்துறையினருக்கு இன்று பிற்பகல் 1.20 மணிக்கு தீ விபத்து குறித்து அலர்ட் வந்துள்ளது. உடனடியாக ஆறு தீ அணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள தீ தடுப்பு கருவி செயல்பாட்டில் இல்லை என்றும் டேங்க் மற்றும் பைப் லைனில் தண்ணீர் இல்லை எனவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
டெல்லியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து எம்.பி.க்கள் இடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "டெல்லியில் உள்ள பிடி மார்க் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இங்கு வசிப்பவர்கள் அனைவரும் மாநிலங்களவை எம்.பி.க்கள். நாடாளுமன்றத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இந்த கட்டிடம் உள்ளது. 30 நிமிடங்களாகியும் தீயணைப்புப் படை வரவில்லை. தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. பலமுறை அழைப்புகள் விடுத்தும் தீயணைப்பு வாகனங்கள் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications