நுபுர் சர்மா சர்ச்சை : ஜும்மா மசூதி உட்பட.. நாடு முழுவதும் வெடித்த இஸ்லாமியர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கண்டித்து டெல்லி ஜும்மா மசூதி உட்பட நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இவரது கருத்து சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. முக்கியமாக இஸ்லாமிய நாடுகளான கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன.

நுபுர் ஷர்மா மீது வழக்குப்பதிவு

நுபுர் ஷர்மா மீது வழக்குப்பதிவு

இதனைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா மற்றும் பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் நுபுர் ஷர்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தாமதமானது என்றும் விமர்சிக்கப்பட்டது.

டெல்லியில் வெடித்த போராட்டம்

டெல்லியில் வெடித்த போராட்டம்

இந்தநிலையில் இன்று டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை முடித்து வெளியே வந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நுபுர் ஷர்மாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பட்டன. திடீரென இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி கண்டனம் தெரிவித்ததால், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட திணறினர்.

கர்நாடகாவில் தொங்கவிடப்பட்ட உருவ பொம்மை

கர்நாடகாவில் தொங்கவிடப்பட்ட உருவ பொம்மை

இதேபோல் கர்நாடக மாநில பெலாகவியில் சிறப்பு தொழுகைக்கு பின் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. அப்போது உருவ பொம்மை ஒன்றுக்கு காவி சேலை கட்டி நுபுர் ஷர்மா புகைப்படம் ஒட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டது.

ஹைதராபாத், கொல்கத்தாவில் போராட்டம்

ஹைதராபாத், கொல்கத்தாவில் போராட்டம்

இதேபோல் தெலங்கானா மாநில ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளமான சார்மினார் முன், ஏராளமான இஸ்லாமியர்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். அதேபோல் மேற்குவங்கத்தில் கொல்கத்தாவிலும், உத்தரப் பிரதேசத்திலும் கான்பூர் நகரில் இஸ்லாமியர்களின் போராட்டம் வெடித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+