தடைகளை எப்படி கடக்கனும் தெரியுமா? ஆனந்த் மகிந்திரா என்ன சொல்லியிருக்காரு பாருங்க.. அடடே செம!
டெல்லி: தடைகள் ஏற்பட்டால் அதை எப்படி கடந்து செல்ல வேண்டும் என பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா, யானை மின் வேலியை லாவகமாக கடந்து செல்லும் வீடியோவை பதிவிட்டு வெளியிட்டுள்ள கருத்து நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தி உள்பட பல துறைகளில் கோலோச்சும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மகிந்திரா. மகிந்திரா குழுமங்களின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். சமூக வலைத்தளங்களில் தான் ரசித்து பார்த்த வீடியோ, தன்னம்பிக்கையூட்டும் கதைகள், நகைச்சுவை துணுக்குகள், அசாத்திய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் படைப்புகள், தனிநபரின் திறமைகள் என தான் பார்த்து வியக்கும் பல விஷயங்களை தனது சமூக வலைத்தளங்களில் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து வருகிறார்.

ஆனந்த மகிந்திராவிற்கு ட்விட்டரில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லும் அளவுக்கு அவரது ட்விட்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகும். ஆனந்த் மகிந்திராவை ட்விட்டரில் 10.7 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். ஆனந்த் மகிந்திராவின் பதிவுகளை வைத்து நெட்டிசன்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொள்வதோடு.. அவர் கூறுவதை ஏற்றோ மறுத்தோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதனால், தொழில் சாம்ராஜ்யத்தையும் தாண்டி ட்விட்டரில் தனது தனித்துவமான பதிவுகள் மூலம் கவனம் ஈர்க்க கூடியவராகவும் ஆனந்த் மகிந்திரா இருக்கிறார். சரி... இங்கே விஷயத்திற்கு வருவோம்.. ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பதிவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் வைரல் ஆன ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது, வனப்பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் வேலியை கவனித்த யானை அதில் சிக்காமல் இருக்க மிகவும் லாவகமாக தனது முன் கால்களால் கம்பியை கட்டி வைத்து இருக்கும் கல் தூணை மிதித்து சரித்து விட்டு பிறகு, எந்த சிக்கலும் இன்றி தனது தடையை கடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பல மாதங்களுக்கு முன்பே இணையத்தில் வேகமாக பரவி நெட்டிசன்களை ரசிக்க வைத்து இருந்தது.

ஆனாலும் ஆனந்த் மகிந்திரா தற்போது அந்த வீடியோவை மீண்டும் பதிவிட்டு, தடைகளை எப்படி கடப்பது என்பதற்கு யானையின் செயலோடு ஒப்பிட்டு பதிவிட்டு இருப்பது இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது. ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- சவால்கள் எவ்வளவு கடினம் என்பதை முதலில் கவனமாக ஆராய வேண்டும். அதன்பிறகு குறைந்த அளவு தடை எங்கே உள்ளது என பரிசோதிக்க வேண்டும்.
அதன்பிறகு மெதுவாக நமது பலத்தை கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக செல்லலாம்" என்று பதிவிட்டுள்ளார். யானையின் செயலை அப்படியே தன்னம்பிக்கையூட்டும் விதமாக தடைகளை கடப்பது எப்படி என்பது குறித்து ஆனந்த் மகிந்திரா கொடுத்து இருக்கும் விளக்கம் நெட்டிசன்கள் மத்தியில் ரசிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications