பிடனுக்கு பின்னிருந்த மூளை.. இந்தியாவிற்கு பறக்கும் அமெரிக்க "மாஸ்டர்மைண்ட்".. பெரிய காரணம் இருக்கு!
டெல்லி: அமெரிக்க அதிபர் பிடனுக்கு நெருக்கமாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் இந்தியாவிற்கு வர இருக்கிறார். ரஷ்யாவிற்கு சிம்ம சொப்பனமாக கருதப்படும் அவர் இந்தியாவிற்கு திடீரென வருவதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ரஷ்யாவின் பல்வேறு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவின் நிறுவனங்கள் பொருளாதார தடையை எதிர்கொண்டு உள்ளது.
இந்த போரில் இதுவரை இந்தியா ரஷ்யாவை எதிர்க்கவில்லை. அமெரிக்கா எவ்வளவு பிரஷர் கொடுத்தும் இந்தியா நடுநிலையாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் டாப் அதிகாரி ஒருவர் இன்று இந்தியாவிற்கு வருகிறார்.

தலீப் சிங்
அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களில் ஒருவரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகருமான தலீப் சிங்தான் இந்தியா வரப்போகும் அந்த முக்கியமான நபர். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அமெரிக்க அதிபருக்கு தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், சர்வதேச பொருளாதார ரீதியாகவும் இவர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இன்று மாலை இந்தியாவிற்கு வரும் தலீப் சிங் நாளை இரவு வரை இந்தியாவில் இருப்பார்.

தலீப் சிங் யார்?
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் இவர் சந்திப்பு நடத்த இருக்கிறார். உக்ரைன் ரஷ்யா போரில் ரஷ்யாவிடம் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை இந்தியா மதிக்கவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய்களை இந்தியா வாங்கும் முடிவில் உள்ளது.

இந்தியா அமெரிக்கா
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனித்து விட அமெரிக்கா நினைத்தாலும் இந்தியா அதை எல்லாம் பெரிதாக மதிக்கவில்லை. சரி விஷயத்திற்கு வருவோம் ரஷ்யா மீதான இந்த பொருளாதார தடைகளை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகுத்தவர்தான் தலீப் சிங். அமெரிக்காவின் சர்வதேச பொருளாதார ஆலோசகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் எப்படி இருக்க வேண்டும் என்று வடிவமைத்தவர் இவர்தான்.

இந்தியா ரஷ்யா
இப்போது இந்தியா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில் இந்தியாவிற்கு விரைந்து இருக்கிறார் தலீப் சிங். அதிலும் சரியாக நேரம் பார்த்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வருகையோடு ஒன்றிப்போகிறது. ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை இந்தியா வர உள்ள நிலையில் தலீப் சிங் இன்று இந்தியா வருகிறார். இந்தியா - அமெரிக்கா உறவு, ரஷ்யா மீதான பொருளாதார தடை பற்றி இவர் பேச இருக்கிறார்.
Recommended Video

அமெரிக்கா பயணம்
அடுத்த மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில்தான் இன்று தலீப் சிங் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. தலீப் சிங் தாத்தா தலீப் சிங் சவுந்த்தான் அமெரிக்காவின் நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதல் ஆசிய அமெரிக்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார தடை
இப்போது பிடனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இவர் ஒபாமா காலத்தில் அங்கு கருவூல துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். அமெரிக்காவின் பொருளாதார ரீதியான முடிவுகளில் முக்கிய பங்கு வகித்தார். ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்கும் திட்டங்களை வகுத்த மாஸ்டர் மைண்ட் இவர்தான். இப்போது இவரே இந்தியா வருகிறார் என்றால் அது மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக இந்தியாவை திருப்ப அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் இதுவாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications