இது என்னடா இன்ஜினியருக்கு வந்த கொடுமை! "தயவு செய்து கால் செய்யாதீங்க!" மேட்ரிமோனியில் கலகல
டெல்லி: திருமணத்திற்கு மாப்பிள்ளை வேண்டிக் கொடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்று இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
பொதுவாகத் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அந்த ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள் தான் இருவரின் வாழ்க்கையை முடிவு செய்வதாக உள்ளது.
இதனால் திருமணத்தை எப்படியாவது நல்லபடியாக நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதே பலரது ஆசை. அதற்காகப் பெற்றோர் எடுக்கும் முயற்சிகளும் மிகப் பெரியது.

திருமணம்
திருமணத்திற்கு மணமகனைத் தேடுவது என்பதே பெற்றோருக்குப் பெரிய அதேநேரம் மிக முக்கியமான வேலையாகும். முன்பெல்லாம் சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதால் நன்கு விசாரித்த திருமணம் செய்து வைத்தனர். அதேநேரம் இப்படி நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்வது பிறக்கும் குழந்தைக்குச் சிக்கலைத் தரலாம் என்பதால் நெருங்கிய சொந்தத்திற்குள் இல்லாமல் திருமணம் செய்யும் நிகழ்வு அதிகரித்து உள்ளது.

கஷ்டம்
இப்போதெல்லாம் மணமகன் அல்லது மணமகளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்து மாப்பிள்ளை, பெண் தேடுவது அதிகரித்து உள்ளது. அப்படி நாளிதழ் ஒன்றில் மாப்பிள்ளை தேவை என்று கொடுக்கப்பட்ட விளம்பரம் தான் இப்போது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த வினோதமான திருமண விளம்பரம் இணையத்தில் இருக்கும் பொறியாளர்களைக் கடுப்பாக்கி உள்ளது என்றே சொல்லலாம். அப்படி என்ன தான் இருக்கிறது அதில்.. வாங்கப் பார்க்கலாம்.

வேண்டவே வேண்டாம்
முன்பெல்லாம் இன்ஜினியர்.. அதுவும் ஐடி துறையில் வேலை பார்க்கும் இன்ஜினியர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஓகே சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை. ஐடி இன்ஜினியர்களுக்கு பெண் கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. இணையத்தில் டிரெண்டாகி வரும் இந்த விளம்பரத்தில் கூட சாப்ட்வேர் இன்ஜினியர் மட்டும் வேண்டவே வேண்டாம் எனக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தி உள்ளனர்.

விளம்பரம்
ஆம் நீங்கள் படிப்பது சரி தான். சாப்ட்வேர் இன்ஜினியர் மட்டும் வேண்டவே வேண்டாம் என்று தான் விளம்பரப்படுத்தி உள்ளனர். இந்த விளம்பரத்தைத் தொழிலதிபர் சமீர் அரோராவும் தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். அதில், "24 வயதான பணக்கார குடும்பம்.. வணிகப் பின்னணி கொண்டிருக்கும் அழகிய பெண்ணுக்கு மணமகன் தேவை" என்று விளம்பரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இன்ஜினியர்
மாப்பிள்ளை அதே சாதியில் இருக்கும் ஒரு ஐஏஎஸ்/ ஐபிஎஸ் அல்லது மருத்துவராக அல்லது அதே சாதியைச் சேர்ந்த தொழிலதிபராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த விளம்பரம் கடைசியில் "சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து கால் செய்ய வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. சாப்டவேர் இன்ஜினியர்களுக்கு எதிர்கலாம் நன்றாக இல்லை போல என்று பதிவிட்டு, இந்தப் படத்தைத் தொழிலதிபர் சமீர் அரோரா பகிர்ந்து உள்ளார்.

கடுப்பான இன்ஜினியர்கள்
இந்த படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதேநேரம் இன்ஜினியர்களுக்கு இங்குப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இது பெரிய தப்பு என்ற ரேஞ்சிலும் புலம்பி வருகின்றனர் இன்ஜினியர்கள். மேலும், எம்பிஏ படித்த மாணவர்களுக்குத் தான் ஐடி சர்வீஸை விற்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும் என்ற ரீதியிலும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications