கரக் முரக்னு கடிச்சு சாப்பிடும் டிரம்புக்கு.. குஜராத்தி வெஜ் மீல்ஸ் வெயிட்டிங்.. செம டிவிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரக் முரக்னு மாட்டிறைச்சியை கடிச்சி சாப்பிடுவதை விரும்பும் டொனால்ட் டிரம்பிற்கு குஜராத்தி வகை சைவ உணவு பரிமாறப்படுகிறது.

Recommended Video

    Trump india visit|சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் சபர்மதி ஆசிரமத்திலும் மோடேரா ஸ்டேடியத்திலும் சிறிது நேரத்தை செலவிடுகிறார். இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து 3.30 மணிக்கு ஆக்ரா புறப்படுகிறார்.

    டிரம்ப் குஜராத் மாநிலத்தில் இருக்கும் வரை அவருக்கு தேவையான உணவுகளை சமைக்க மூத்த சமையல் கலைஞர் சுரேஷ் கன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆய்வாளர்கள்

    ஆய்வாளர்கள்

    சபர்மதி ஆசிரமத்தில் கமான் டோக்லா, ஸ்பெஷல் குஜராத்தி ஜின்ஜர் டீ, பிரக்கோலி மற்றும் கார்ன் சமோசா, ஐஸ் டீ, கிரீன் டீ, மல்ட்டி கிரைன் குக்கீஸ் ஆகியன வழங்கப்படவுள்ளது. விருந்தினர்களுக்கு உணவுகளை அளிப்பதற்கு முன்னதாக இவர் சமைக்கும் உணவுகளை உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் ருசிப்பர் என கூறப்படுகிறது.

    ஷில்பா ஷெட்டி

    ஷில்பா ஷெட்டி

    சுரேஷ் கன்னா இதுவரை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு உணவு சமைத்துக் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் திரை பிரபலங்களான அமிதாப் பச்சன் மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோருக்கும் சமைத்துள்ளார். மோடி சுத்த சைவ பிரியர் என்பதால் டிரம்பிற்கும் சைவ உணவையே மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    விரும்பி உண்ணுவார்

    விரும்பி உண்ணுவார்

    டொனால்ட் டிரம்ப் அசைவ பிரியராம். ஆனால் அவருக்கு இந்தியாவில் பரிமாறப்படும் உணவுகள் சைவம். டிரம்ப் மாட்டிறைச்சியை கெட்ச் அப்புடன் சாப்பிடுவது அவருக்கு பிடிக்கும். அத்தோடு துரித உணவுகளான மெக் டொனால்ட், பர்கர் கிங், கேஎஃப்சி, டயட் கோக் ஆகிய உணவுகளையும் விரும்பி உண்ணுவாராம்.

    ஆர்டர்

    ஆர்டர்

    அது போல் மாட்டிறைச்சி வைக்கப்பட்ட பர்கரையும் அவர் விரும்பி சாப்பிடுவார். ஒருமுறை கிளம்சன் டைகர்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்லூரி புட்பால் சாம்பியன் நிகழ்ச்சியில் பீட்சா, 1000 பர்கர்கள், பிரைகளை இரவு உணவுக்கு டிரம்ப் ஆர்டர் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படி கரக் முரக்னு சாப்பிடும் டிரம்பிற்கு இந்தியாவில் சைவ உணவு வழங்கப்படுவது என்பது நிச்சயம் செம டிவிஸ்ட்டாக இருக்கும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+