அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு சமரச முயற்சி தோல்வி... உச்சநீதிமன்றம் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் சமசர தீர்வு காண முடியவில்லை என மத்தியஸ்தர் குழு கைவிரித்துவிட்டதால் இனி ஆகஸ்ட் 6ம் தேதி முதல் வழக்கின் விசாரணை தினமும் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த குறிப்பிட்ட பகுதி தொடர்பாக இந்து அமைப்புகளுக்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது.

இதன் காரணமாக கடந்த 1992ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவா ஆதரவாளர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரிந்து அவற்றை ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமனற்ம், சமரசதீர்வு காண 3 பேர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 8ம் தேதி அமைத்தது.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவி சங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் குழு சமமந்தப்பட்ட தரப்புகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது தலைமை நீதிபதி, பேச்சுவார்த்தை மூலம் சமசர தீர்வு காணமுடியவில்லை என மத்தியஸ்தர்கள் குழு தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் அயோத்தி வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications