மருத்துவ மேல்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு சரி- சுப்ரீம்கோர்ட் திட்டவட்ட தீர்ப்பு
டெல்லி: மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்தின்படி சரியானதுதான் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு - OBC-க்கு 27% இடஒதுக்கீடு வழங்க கடந்த ஆண்டு ஜூலை 29-ந் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த வழக்கில் இணைந்து கொண்டன. இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 7-ந் தேதியன்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும் உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு நடப்பாண்டில் மட்டும் அமல்படுத்தலாம்; இது தொடர்பான விரிவான தீர்ப்பு மார்ச் மாதம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று விரிவான தீர்ப்பை வழங்கியது. அதில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனப்படி சரியானதுதான் என திட்டவட்டமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications