கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை: நாடு முழுவதும் இடைவிடாமல் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம்!
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவம் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையேயான அரசியல் மோதலாகவும் திசைமாறி உள்ளது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் பயிற்சி மருத்துவர் படுகொலையின் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரியின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆர்ஜி கர் மருத்துவமனையை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். ஆர்ஜி கர் மருத்துவமனை விவகாரமானது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜகவால் திசை திருப்பிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்த போஸும் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். கொல்கத்தாவில் ஒரு வாரமாக போராடி வரும் மருத்துவ மாணவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்கின்றனர்.
டெல்லியிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் நிர்மான் பவன் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கொல்கத்தாவில் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் பேரணி நடத்தினர். சண்டிகரிலும் கொல்கத்தா சம்பவத்துக்கு நீதி கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications