பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மன்னன் மெகுல் சோக்ஷி டொமினிகாவில் பிடிபட்டது எப்படி?
டெல்லி: பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஷி நேற்று டொமினிகாவில் கைது செய்யப்பட்டார். அவரை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆன்டிகுவா அரசு தெரிவித்துள்ளது.
நீரவ் மோடியும் மெகுல் சோக்ஷியும் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணையை மேற்கொண்டது. நீரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர் கொண்டு வருகிறார்.

கரீபியன் தீவு
அதே நேரம் மெகுல் சோக்ஷி கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவா நாட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த நாட்டில் 2018ஆம் ஆண்டு அவர் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.

நாடு கடத்தல்
தேடப்படும் நபர்களை நாடு கடத்தல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆண்டிகுவா இல்லை. எனினும் அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டுள்ளன.

பர்புடா
மெகுல் சோக்ஷிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸும் இண்டர்போல் விடுத்தது. இந்த நிலையில் ஆண்டிகுவாவில் இருந்த சோக்ஷி திடீரென அங்கிருந்து மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் இவர் பர்புடாவில் இருப்பதாக தகவல் வந்த நிலையில் அங்கும் அவரை காணவில்லை.

மெகுல் சோக்ஷி
இந்த நிலையில் டொமினிகா தீவில் இருந்த சோக்ஷி நேற்று அதிரடியாக இன்டர்போல் போலீஸால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து இன்டர்போல் போலீஸார் கூறுகையில் மெகுல் சோக்ஷி சுற்றி வளைக்கப்பட்டு டொமினிகாவில் கைது செய்யப்பட்டார்.

இந்தியா
அவர் ஆன்டிகுவா மற்றும் பர்புடாவிலிருந்து படகு மூலம் தப்பி டொமினிகா வந்துள்ளது தெரியவந்தது என்றனர். இந்தியாவுக்கு நாடு கடத்தல் மற்றும் அவரது குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் இரு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார்.

கைது
அவர் ஆண்டிகுவா வீட்டில் காணவில்லை என அவரது வீட்டு பணியாளர் தகவல் சொன்னார். இதையடுத்து அவர் மாயமானது குறித்து ஆன்டிகுவா மற்றும் பர்புடா போலீஸார் இன்டர்போலுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் அவர் டொமினிகாவில் கைது செய்யப்பட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications