பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட பொருட்கள்.. உங்கள் கைக்கு வரவேண்டுமா.. அப்ப இதைச் செய்யுங்கள் முதலில்..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட பொருட்களை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.

Recommended Video

    நீங்களும் பிரதமரின் நினைவுப் பரிசை ஏலத்தில் எடுக்கலாம்! | Modi’s Gift Auction | Oneindia Tamil

    அக்டோபர் 7-ம் தேதி வரை மின் ஏலம் மூலம் பிரதமருக்கு கொடுக்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலம் விடுகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

    இந்த ஏலம் மூலம் கிடைக்கும் தொகையை நமாமி கங்கா திட்டத்துக்கு, அதாவது கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நினைவுப்பரிசு

    நினைவுப்பரிசு

    பிரதமர் மோடியை சந்திப்பவர்களும், அவரை தலைமை தாங்க வைத்து விழா நடத்துபவர்களும் நினைவுப் பரிசாக பல்வேறு பொருட்களை அவருக்கு கொடுப்பது வழக்கம். கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை மின் ஏலம் மூலம் ஏலம் விடும் நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய இந்த மின் ஏலம் வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    வரலாற்றுச் சிறப்பு

    வரலாற்றுச் சிறப்பு

    pmmementos.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஏலத்தில் பங்குபெற விரும்புவோர் தங்கள் விவரத்தை பதிவு செய்து, பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட பொருட்களை ஏலம் எடுத்து தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை இந்த மின் ஏலம் மூலம் இந்தியாவின் எந்த மூலையில் வசிப்பவர் வேண்டுமானாலும் தங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ள முடியும்.

    நமாமி கங்கா

    நமாமி கங்கா

    உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்களும் இந்த ஏலத்தில் அடங்கும் எனத் தெரிகிறது. பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட நினைவுப் பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் உயர்த்தி கிடைக்கும் தொகை முழுவதும், நமாமி கங்கா திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நமாமி கங்கா என்பது கங்கை நதியை தூய்மைப்படுத்தும் மிகப்பெரிய பணியாகும்.

    நாளிதழ் விளம்பரம்

    நாளிதழ் விளம்பரம்

    இதனிடையே இது தொடர்பாக இன்று அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் வெளியிட்டுள்ள மத்திய அரசு, இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் இதனை தவறவிடாதீர் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதுமிருந்தும் பலரும் இந்த மின் ஏலத்தில் ஆர்வமுடன் பங்கேற்று பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட பொருட்களை ஏலம் மூலம் தங்களுக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+