"கவனம்.. இதுதான் முக்கியம்".. மோடியுடன் 4 பாஜக எம்எல்ஏக்கள் மீட்.. மேலிடம் அனுப்பிய சிறப்பு மெசேஜ்?
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாட்டை சேர்ந்த 4 பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்த நிலையில், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஏக குஷியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 4 இடங்களில் வென்று, சட்டசபைக்கு சென்றாலும் கூட, பாஜகவினர் இடையே கடந்த சில நாட்களாக பெரிய மகிழ்ச்சி காணப்படவில்லை. காரணம் கட்சிக்குள் நிலவிய கடுமையாக கோஷ்டி மோதல்.
பெரிதாக வெளியே தெரியாமல் இருந்த கோஷ்டி கடந்த சில நாட்களாக பட்டவர்த்தமான சர்ச்சையாகும் நிலைக்கு சென்றது. முக்கியமாக வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த விவாதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச். ராஜா
காரைக்குடியில் தேர்தல் செலவிற்கு கொடுத்த பணத்தை எச். ராஜா அபகரித்துவிட்டார். 4 கோடி ரூபாயில் வீடு கட்டுகிறார். தேர்தல் செலவு நிதியை சொந்த செலவிற்கு பயன்படுத்துகிறார் என்று எச். ராஜா மீது காரைக்குடி நிர்வாகிகள் புகார் வைத்தனர். இதனால் காரைக்குடி பாஜக நிர்வாகிகள் பலர் கூண்டோடு வெளியேறினார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் பாஜக தேசிய தலைமை வரை சென்றது.

வெளியேற்றம்
தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் பூசல் குறித்தும், தேர்தல் செலவினம் குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் இதை பற்றி கண்டிப்பாக விசாரிப்பேன். எச். ராஜாவாக இருந்தாலும் கண்டிப்பாக அவர் மீதான புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இதன் பின் எச். ராஜாவிற்கு எதிராக புகார் வைத்த சந்திரன் என்ற நிர்வாகி உட்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மோதல்
சந்திரன் நீக்கம், எச். ராஜா மீதான புகார், எல்.முருகன் பேட்டி என்று தமிழ்நாடு பாஜகவில் கடந்த சில நாட்களாக கசப்பான சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில்தான் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினார். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தார்.

சந்தோசம்
தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகளை பிரதமர் மோடி பாராட்டியதாகவே கூறப்படுகிறது. சட்டசபையில் பாஜக நன்றாக நடந்து கொண்டது. முதல் கூட்டத்தொடரில் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டனர். இதேபோல் பட்ஜெட் கூட்டத்தொடரில் செயல்பட வேண்டும். வேக்சின் குறித்து கேள்வி எழுப்புங்கள்.

தொகுதி
உங்கள் தொகுதிக்கு வேக்சின் வரவில்லை என்றால், வேக்சின் வேஸ்ட் அதிகம் இருந்தால் அதை பற்றி கேள்வி எழுப்புங்கள் என்று பிரதமர் மோடி எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். மொத்தத்தில் இந்த மீட்டிங் பாசிட்டிவ்வாக இருந்ததாகவே பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால் அதே சமயம் தமிழ்நாடு பாஜகவில் இனி கோஷ்டி மோதல் இருக்க கூடாது.

அறிவுரை
நிர்வாகிகளுக்கு இடையிலான மோதலை வெளியே பொதுவில் பேச கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிகிறது. மோடியுடன் நடந்த மீட்டிங்கிற்கு பின் டெல்லி பாஜக மேலிடம் இந்த அறிவுரையை வழங்கியதாக கூறப்படுகிறது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் மோதல் இன்றி இருப்பதே முக்கியம்.

வேறுபாடு
கருத்து வேறுபாடு, புகார் இருந்தால் கட்சி கூட்டத்தில் பேசுங்கள், மீடியாவிடம் பேச வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒற்றுமைதான் முக்கியம் என்று மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. அதே சமயம் எந்த நிர்வாகி மீது தேசிய தலைமை தனிப்பட்ட வகையில் கோபத்தில், வருத்தத்தில் இல்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் தமிழ்நாடு பாஜகவில் பெரிய அளவில் ஆக்சன்கள் எதுவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications