இந்திய தேர்தல்! வார்த்தையை விட்ட மார்க் சூகர்பெர்க்.. நாடாளுமன்ற குழு அதிரடி.. சம்மன் அனுப்ப திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தேர்தல் குறித்த மார்க் சூகர்பெர்க்கின் கருத்து தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் ஆளும் கட்சிகள் தோல்வியை சந்தித்தன" என்றார். இந்தியாவில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததாக மார்க் சூகர்பெர்க் கூறிய கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா. இதன் தலைவராக இருப்பவர் மார்க் சூகர்பெர்க். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் மார்க் சூகர்பெர்க் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய மார்க் சூகர்பெர்க், "கடந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக இருந்தது" எனவும் குறிப்பிட்டார். மேலும், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றது.

mark zuckerberg meta company parliament

கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் ஆளும் கட்சிகள் தோல்வியை சந்தித்தன" என்றார். இந்தியாவில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததாக மார்க் சூகர்பெர்க் கூறிய கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக இதற்கு பதில் கொடுத்தார். அவர் கூறுகையில், "2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 64 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீது இந்திய மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். எனவே, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், ஆட்சியில் இருந்த அரசுகள் தோல்வியடைந்ததாக மார்க் சூகர்பெர்க் கூறியது சரியான கருத்து இல்லை. தவறானது. இந்தியா கொரோனா கால கட்டத்தில் 800 மில்லியன் பேருக்கு இலவச உணவு, 2.2 பில்லியன் இலவச தடுப்பூசிகள் வழங்கியது. பிரதமர் மோடி மூன்றவாது முறையாக வெற்றி பெற்றது அவரது நல்ல ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த சாட்சியாக உள்ளது" என்றார்.

இந்த நிலையில்தான், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்கின் பேச்சு விவகாரத்தை கையில் எடுத்துள்ள நாடாளுமன்ற குழு, மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தகவல் தொழில் நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும் பாஜக எம்பியுமான நிஷிகாந்த் துபே கூறியதாது:- மெட்டா நிறுவனம் தவறான தகவல்களை பரப்புவதற்காக மன்னிப்பு கோர வேண்டும்.

இந்த தவறான தகவலுக்காக மெட்டா நிறுவனத்திற்கு எனது குழு சம்மன் அனுப்ப உள்ளது. எந்த ஒரு ஜனநாயக நாடு மீதான தவறான தகவலும் அதன் பெயரை கெடுக்கும் விதமாக உள்ளது. எனவே, இந்திய நாடாளுமன்றத்திடமும் நாட்டு மக்களிடமும் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றது. ஆனாலும் கடந்த இரண்டு முறை வென்றதை போல பாஜகவுக்கு 2024 தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்தியா கூட்டணி கட்சிகள் 234 இடங்களில் வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 99 இடங்களில் வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+