இந்து பெயர்கள்.. சர்ச்சையை கிளப்பிய வெப் சீரிஸ்.. நெட்ஃப்ளிக்ஸுக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு!
டெல்லி: மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் உள்ளடக்கத் தலைவரிடம் 'IC-814 - தி கந்தகார் ஹைஜாக்' தொடர் குறித்து விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது. நாளை, நெட்ஃப்ளிக்ஸ் சார்பில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்' (IC814: The Kandahar Hijack) என்ற சீரிஸ் வெளியானது. அனுபவ் சின்ஹா இந்த சீரிஸை இயக்கி இருக்கிறார். இந்த வெப் சீரிஸில், இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் பெயர்களில் போலா, சங்கர் என்ற இந்த மதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையாக வெடித்தது.

இதற்கு வலதுசாரி அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். விமான கடத்தலில் இந்து மதத்தைச் சேர்ந்த யாருமே ஈடுபடவில்லை என்றபோதிலும் நெட்ஃபிளிக்ஸ் தொடரில் கடத்தல்காரர்கள் சிலரின் பெயர்களை இந்து பெயர்களாக இயக்குநர் சூட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தவறான கருத்துகள் பரப்பப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
ஐசி-814 விமானத்தை ஹைஜாக் செய்தவர்கள் தங்கள் இஸ்லாமிய அடையாளத்தை மறைக்க போலி பெயர்களை வைத்திருந்தனர். அந்த போலி பெயர்களை இயக்குநர் அனுபவ் சின்ஹா பயன்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குற்றங்களை சினிமா மூலம் மறைக்கும் இடதுசாரி நோக்கத்துடன் இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக நிர்வாகி அமித் மால்வியா தெரிவித்தார்.
IC814 - தி கந்தகார் ஹைஜாக் தொடர் குறித்த சர்ச்சை வாதங்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படவே, ஓடிடி மற்றும் பிற ஒளிபரப்பு விஷயங்களை கண்காணித்து வரும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் உள்ளடக்கத் தலைவரிடம் 'விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சட்டரீதியான பதில் அளிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. நாளை, நெட்ஃப்ளிக்ஸ் சார்பில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் அண்மைக் காலத்தில் பெரிய கவனிப்புக்கு உள்ளாகி வருகின்றன. கருத்தியல் ரீதியாக எடுக்கப்படும் சில படைப்புகள் ஒருசில நேரங்களில் பெரிய அளவிலான விவாதத்திற்கும் வித்திடுகின்றன என்பதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தனது ஒளிபரப்பு அமைச்சகத்தின் வாயிலாக சட்டங்களை கடுமையாக்க தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications