உலகமே மைக்ரோசாப்ட் முடக்கத்தால் தவித்தபோது.. சீனாவில் மட்டும் பாதிப்பே இல்லையே ஏன்? 3 காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில நாட்களாக மொத்தமாக முடங்கி இருந்தது. இதனால் உலகளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அமெரிக்கா தொடங்கிய இந்தியா வரை பல சர்வீஸ்கள் முடங்கின. ஆனால், சீனாவில் இந்த முடக்கத்தால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சர்வீஸ் முடங்கியதால் வெள்ளிக்கிழமை பல நாடுகளிலும் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கோபைலட் உள்ளிட்ட சேவைகள் குறைந்தது 74 நாடுகளில் முடங்கின. ஆனால், சீனாவில் இந்த பாதிப்பு பெரிய அளவில் உணரப்படவில்லை. இதற்குக் காரணம் சீனா பயன்படுத்தும் தனித்துவமான கிளவுட் கட்டமைப்பும், உள்நாட்டு சாப்ட்வேருக்கு அந்நாடு அளித்து வரும் முக்கியத்துவமும் தான்.

Microsoft Outage

முதல் காரணம்

முதலாவது காரணம், சீனாவில் மைக்ரோசாப்ட் 365 சர்வீஸ் நேரடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இயக்கப்படுவதில்லை. அங்கு 21Vianet என்ற உள்ளூர் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் சீனாவுக்குள்ளேயே தனியாக கிளவுட் கட்டமைப்பை இயக்குகிறது. இது மைக்ரோசாப்ட்டின் சர்வதேச நெட்வொர்க் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து தொழில்நுட்ப ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய மைக்ரோசாப்ட் சேவையில் ஏற்பட்ட கோளாறு சீனாவின் உள்ளூர் கட்டமைப்பை பாதிக்கவில்லை.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம், உள்நாட்டு சாப்ட்வேர்களுக்கு சீனா கொடுத்துள்ள முக்கியத்துவம். சீன அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மேற்கத்திய சாப்ட்வேர்களில் இருந்து விலகி, WPS Office, DingTalk, WeCom, Feishu போன்ற சீன சாப்ட்வேர்களை பயன்படுத்தி வருகின்றன. இதனால் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டாலும், அந்நாட்டின் முக்கியமான அரசு மற்றும் நிறுவன பணிகள் முடங்கும் நிலை ஏற்படவில்லை.

3வது காரணம்

மூன்றாவது காரணம், சீனாவின் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள். முக்கியமான டேட்டா கிளவுட் சர்வீஸ்கள் சீனாவுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அந்நாட்டு விதிகள் வலியுறுத்துகின்றன. வெளிநாடுகளுக்கு டேட்டா அனுப்புவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் சர்வதேச நெட்வொர்க்கில் ஏற்படும் கோளாறுகள் சீனாவின் உள்ளூர் கட்டமைப்புகளுக்கு பரவுவது குறைகிறது.

இருப்பினும், சீனாவில் பாதிப்பே இல்லை என்று கூறிவிட முடியாது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள், மைக்ரோசாப்ட்டின் சர்வதேச சேவைகளை பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டன. வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள மைக்ரோசாப்ட் சேவைகளை நம்பியிருந்த சீன ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன.

ரொம்பவே குறைவு

மேலும், டவுன்டிடெக்டர் போன்ற இணையதளங்களில் சீனாவில் பாதிப்பு குறைவாக இருப்பதாக சொல்ல மற்றொரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் அந்த கண்காணிப்பு இணையதளமே சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கிருந்து கிடைக்கும் புகார்களின் எண்ணிக்கை குறைவாகவும் துல்லிமய் குறைவாகவும் இருக்கலாம். இருப்பினும், பிரதானமாக சீனாவின் விதிகளும் உள்ளூர் சாப்ட்வேர் முக்கியத்துவமே அதை இந்த முடக்கத்தில் இருந்து பெரியளவில் காப்பாற்றி இருக்கிறது.

மைக்ரோசாப்ட்டின் இந்த முடக்கம் உலக நாடுகளுக்கு ஒரு முக்கியமான பாடத்தை சொல்லி கொடுத்துள்ளது. ஒரு சில பெரிய கிளவுட் நிறுவனங்களையே முழுமையாக நம்பியிருப்பது ரொம்பவே ஆபத்தானது. குறிப்பிட்ட அந்த நிறுவனங்களில் கோளாறு ஏற்படும்போது ஒட்டுமொத்த சேவைகளும் முடங்கும் அபாயத்தை இது உருவாக்குகிறது.

என்ன தீர்வு

அதேநேரத்தில், வெளிநாட்டு நிறுவனங்களை விட்டு விலகி உள்நாட்டு நிறுவனங்களை மட்டுமே நம்புவதும் முழுமையான தீர்வல்ல. உதாரணமாக, அலிபாபா கிளவுட் அல்லது ஹுவாய் கிளவுட் போன்ற நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருந்தாலும், வேறு விதத்தில் அதேபோன்ற அபாயம் தொடரும். மேலும், சர்வதேச நெட்வொர்க்கில் இருந்து முழுமையாக விலகி இருக்கும்போது தணிக்கை, வெளிப்படைத்தன்மை குறையும்.

எனவே, உண்மையான டிஜிட்டல் தற்சார்பு என்பது வெளிநாட்டு தொழில்நுட்பத்தை முழுமையாக தவிர்ப்பது மட்டுமல்ல. எந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தினாலும், டேட்டாவை வேறு தளத்துக்கு எளிதாக மாற்றும் வசதி, சர்வதேச தரநிலை குறிப்பிட்ட நிறுவனத்தை முழுமையாக சார்ந்து இல்லாமல் இருப்பது போன்றவை அடிப்படை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+