சுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்.." இவ்வாறு பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர். டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் இவ்வாறு அவர் கூறிய வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகள் நடுவே கடும் போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் தீவிரமாகி உள்ளது.

Minister Anurag Thakur chant kill the traitors

இந்த நிலையில்தான் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், "துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்" (Desh ke gaddaron ko, Goli maro salon ko) என்று பொருள்படும் வகையிலான ஹிந்தி முழக்கத்தை முன் வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முந்தைய கூட்டங்களின்போதும், இதுபோன்ற கோஷம் முன்னெடுக்கப்பட்டது. அப்போதே இது சர்ச்சைக்கு உள்ளானது.

மாடல் டவுன் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள கபில் மிஸ்ரா கடந்த மாதம் இதே போன்ற ஒரு கோஷத்தை முன்வைத்தார். இருப்பினும் அவரது பேச்சுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று பாஜக தலைமை தெரிவித்து விட்டது. ஆனால் இந்த கோஷம் முன்வைக்கப்பட்ட பிறகுதான், பாஜக சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற பாஜக கூட்டத்திலும், இதே போன்ற ஒரு கோஷம் எழுந்தது. இப்போது மத்திய இணை அமைச்சர் ஒருவரே, இப்படி கோஷமிட்டுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+