சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்கி கண்களை தோண்டிவிடுவோம்.. மத்திய அமைச்சர் பகீர் மிரட்டல்
டெல்லி: சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்கிவிடுவோம், கண்களை தோண்டிவிடுவோம் என அமைச்சர் உதயநிதியின் பெயரை சொல்லாமல் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இந்த தலைப்பே எனக்கு பிடித்திருக்கிறது. சனாதனத்தை எதிர்ப்போம் என சொல்லாமல் சனாதனத்தை அழிப்போம் என சொல்லியிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.

சில விஷயங்களை ஒழிக்க வேண்டும். சில விஷயங்களைத்தான் எதிர்க்க வேண்டும். அந்த வகையில் சனாதனம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அழிக்கப்பட வேண்டிய ஒன்று. டெங்கு, மலேரியா, கொரோனா உள்ளிட்டவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது என உதயநிதி தெரிவித்திருந்தார்.
இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய உதயநிதியின் தலையை சீவுவோம் என அயோத்தி சாமியார் மிரட்டல் விடுத்திருந்தார். அது போல் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பலர் சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து எத்தனை பேர் எதிர்த்தாலும் சனாதனத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறேன். என் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் சனாதனத்தை ஒழிப்பேன் என கூறிய கூட்டத்தில் உதயநிதியின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பதவிவிலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்தார்.
இதை வலியுறுத்தி நேற்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருப்பதாவது: சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்களை தோண்டுவோம். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் நாட்டில் அரசியல், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்து கொள்ள முடியாது என சர்ச்சையை ஏற்படுத்தும்படி பேசியுள்ளார்.
-
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications