இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

எவ்வளவு ஃப்ரீ டைம் கிடைக்குது பாருங்க.. ராமாயண நாடகத்தில் நடித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   ராமாயண நாடகத்தில் நடித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்- வீடியோ

   டெல்லி: ராமலீலா நாடகத்தில் ஜனகர் மகாராஜா வேடத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நடித்தது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

   நவாடு முழுவதும் நவராத்திரி விழா துவங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது பல பகுதியில் ராம்லீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கம்.

   Minister Harshavardhan acts as a Seetha Devis father character in drama

   அதன்படி டெல்லியில் செங்கோட்டையில் நடைபெற்ற லவகுசா ராம் லீலா நாடகத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சீதையின் தந்தையான ஜனகன் வேடத்தில் அவர் நடித்துள்ளார். நாடகத்தின் மீது இவர் கொண்ட பற்று அப்பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளது.

   தசரா பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில், ராமாயணத்தை விளக்கும் வகையில் லவகுசா ராம்லீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் வரும் 19 ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில், சீதையின் தந்தையான ஜனகன் வேடத்தில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் நடித்தார்.

   இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சீதா தேவியின் தந்தை ஜனகர் வேடத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.டெல்லியில் உள்ள லவ குசா ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. சிறு வயதில் ராம்லீலா நாடகங்களை பார்த்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

   [ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினரானது இந்தியா.. 188 நாடுகள் ஆதரவு!]

   இதற்காக அமைச்சர் மிகப்பெரிய மீசை வைத்திருந்தார். ஏராளமான மேக்கப் போட்டிருந்தார். பார்ப்பதற்கே அரசர் பரம்பரையை சேர்ந்தவர் போல் இருந்தார்.

   வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

   English summary
   The Environment Minister tried his hand in acting at the popular Ramleela depicting the life of Lord Rama organised by the Luv Kush committee as Janak.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more