முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுகளை நிஜமாக்குவோம்! அமைச்சர் மனோ தங்கராஜ் மிகத் திட்டவட்டம்!
டெல்லி: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுகளை நிஜமாக்குவோம் என அந்த துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்துள்ளார்.
கடலில் காணாமல் போகும் மீனவர்களை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறிவது பற்றி புதிய முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது;

ஐடி அமைச்சர்கள்
தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா மாநில IT அமைச்சர்களுக்காண மாநாட்டில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்களை பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக "கடைசி மைல் இணைப்பு" (Last Mile Connectivity) என்று சொல்வோம் - அனைத்து கிராமங்களுக்கும் Internet சேவைகள் தடையின்றி கிடைப்பதற்கான முயற்சி தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் எடுக்கப்பட்டிருக்கறது.

மின் அலுவலகம்
அது போன்று எல்லா மக்களுக்கும் இணைய வழி (Online) வசதிகள் Onlineல் அரசினுடைய சேவைகளை பெறுகின்ற வசதி இ-சேவை மூலமும் ஒவ்வொரு அலுவலகத்திலும், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் "மின் அலுவலகம்" (e-Office) மூலமாக இணைப்பது, e-Office திட்டத்தினை மாநிலம் முழுவதும் நடைமுறை படுத்துவது, அதே போன்று தரவுகளின் அடிப்படையிலான அரசு தரவுகளை வைத்து திட்டங்கள் தீட்டுகின்ற திட்ட உதவிகள் (Welfare Assistance) கொடுக்கின்ற அந்த திட்டம் போன்றவை மிகுந்த வரவேற்பை இங்கு பெற்றிருக்கிறது.

மீனவர்கள் மாயம்
நம் மீனவர்கள் காணாமல் போகின்ற நேரத்தில் அவர்களை கண்டுபிடிப்பது போன்ற வற்றில் மிகப் பெரிய சிக்கல் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. அவற்றிற்கான தீர்வு காண சில தொழில்நுட்பங்களை நான் தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பார்வையிட்டேன். உண்மையிலேயே சிறந்ததாக இருக்கிறது அதை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்துவதற்கு மீன்வளத்துறை அமைச்சரோடு பேசி அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

முதல்வர் கனவு
இன்றைக்கு பல்வேறு நாடுகளில் இருக்கிற Best Practices அவற்றையெல்லாம் தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழகத்தை டிஜிட்டல் சேவைகளில் முதல் வரிசையில் வைக்க வேண்டும் என்ற நம் முதல்வர் கனவுகளை இந்த துறை நிச்சயமாக நினைவாக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications