திருநாவுக்கரசருக்கு 70 வயசாச்சு.. இன்னும் கல்யாணம் பத்தியே யோசிக்கிறாரே.. ராஜேந்திர பாலாஜி கலாய்
டெல்லி: திருநாவுக்கரசருக்கு 70 வயதாகியும் இன்னமும் திருமணம் பற்றியே யோசிக்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.
அரசியலில் எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு கடந்த காலம் முதற்கொண்டு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக- பாஜக- பாமக கூட்டணி உறுதியானது. இந்த கூட்டணி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து கூறுகையில் அதிமுக- பாஜக- பாமக கூட்டணி ஒரு கட்டாயக் கல்யாணம் என்றார்.

கட்டாயம் கிடையாது
இந்த நிலையில் டெல்லியில் ஆவின் பால் விற்பனையகத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக- பாமக இடையே கட்டாய கல்யாணம் கிடையாது.

கட்சிகள்
திருநாவுக்கரசருக்கு வயது 70 ஆகியும் திருமணம் பற்றியே இன்னமும் யோசிக்கிறார். எப்போதும் அதிமுக, திமுக மட்டுமே களத்தில் இருக்கும். இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும்.

விமர்சனம்
டிடிவி தினகரன் வேறு கட்சி ஆரம்பித்துவிட்டார். அவர் எப்படி அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியும். திமுக கூட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மற்ற கட்சிகளை அழைக்கிறது. ஆனால் அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்வது ஏன்.

நிலைப்பாட்டில் மாற்றம்
இவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள். நாங்கள் மட்டும் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமா. அரசியல் சூழலை பொறுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றன. தமிழக வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை திட்டம் அவசியம் தேவை என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications