அட செம.. இயந்திர துப்பாக்கியால் மாஸாக சுட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்.. வைரலாகும் போர் கப்பல் வீடியோ!

ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் எந்திர துப்பாக்கியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இயக்கினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எந்திர துப்பாக்கியை இயக்கினார்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இந்திய கடற்படை அதிகாரிகளை சந்தித்து வருகிறார். கடற்படையின் பலம், கோரிக்கைகளை கேட்டு அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் எல்லையில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டு வந்தார்.

Minister Rajnath Singh fired machine gun on-board INS Vikramaditya

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் சோதனை நடத்தினார். அதன்பின் அங்கு வீரர்களுடன் சேர்ந்து யோகா செய்தார். பின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லையில் நமது கடற்படை சிறப்பாக பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. ஆனால் நம்முடைய கடற்படை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் இருந்து ராஜ்நாத் சிங் பேசினார்.

அதன்பின் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் எந்திர துப்பாக்கியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இயக்கினார். கடலை நோக்கி அவர் தொடர்ச்சியாக கப்பலில் இருந்து சுட்டார். இது மீடியம் ரேஞ்ச் மெஷின் துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

எந்திர துப்பாக்கியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இயக்கும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+