கெஜ்ரிவால் நேர்மையா இருக்கார்.. ஆம் ஆத்மியில் இணைந்த மிஸ் இந்தியா.. டெல்லியில் அதிரடி!
டெல்லி : முன்னாள் மிஸ் இந்தியாவான டெல்லியை சேர்ந்த மான்சி சேகல், இன்று ஆம்ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மண்டல பிரிவின் தலைவர் ராகவ் சதா முன்னிலையில் மான்சி, அக்கட்சியில் இணைந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது பற்றி மான்சி கூறுகையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான ஆட்சி என்னை மிகவும் ஈர்த்தது. எல்எல்ஏ ராகவ் சதாவின் கடின உழைப்பும் பிடிக்கும். இதனால் ஆம் ஆத்மி கட்சியில் சேர முடிவு செய்தேன்.

தூய்மையான அரசியலின் மூலம் நாம் வாழும் உலகின் குறிப்பிடப்படும் படியான மாற்றத்தை கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன் என்றார். மேலும் இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும், ஆம் ஆத்மியில் இணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மான்சி, தங்கள் கட்சியில் இணைந்தது பற்றி தெரிவித்த எம்எல்ஏ ராகவ் சதா, ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இப்போது வரை இளைஞர்களுக்கு அரசியலுக்கு வர நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி குடும்பம் ஒவ்வொரு நாளும் பெரிதாக வளர்ந்து வருகிறது. ஆம் ஆத்மி குடும்பத்தில் இணைந்துள்ள மான்சியை வரவேற்கிறேன் என்றார். மேடை பேச்சாளரான மான்சி, இன்ஜினியர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். இவர் 2019 ல் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications