இவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்
டெல்லி: டெல்லியில் காற்று மாசு குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத கவுதம் காம்பீர் குறித்து தலைநகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து இவருக்கு கிழக்கு டெல்லி எம்பி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கட்சித் தலைமை வழங்கியது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரங்களில் இவர் உள்ளே குலுகுலு ஏசியில் உட்கார்ந்து கொண்டு வேகாத வெயிலில் வாக்கு கேட்க தன்னை போல் இருக்கும் ஒருவரை ஏற்பாடு செய்ததாக புகார்கள் இவர் மீது வந்தன. எனினும் கிழக்கு டெல்லியில் கவுதம் காம்பீர் வெற்றி பெற்றார்.

சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
அது மட்டுமல்லாமல் அங்குள்ள அனைத்து எம்பி தொகுதிகளிலும் பாஜகவே வென்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக டெல்லியில் காற்று மாசு பாடாய்படுத்தி வருகிறது. மக்களால் நல்ல காற்றை சுவாசிக்கக் கூட முடியாமல் ஆக்ஸிஜனை காசு கொடுத்து வாங்கி சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதிநிதி
இதற்காக வாகன கட்டுப்பாட்டு முறை என கொண்டு வந்தாலும் காற்று மாசு குறைந்தபாடில்லை. இந்த நிலையில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த 15-ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்தது. அந்த கூட்டத்தில் டெல்லி கிழக்கு தொகுதியின் பிரதிநிதி என்ற முறையில் காம்பீர் கலந்து கொள்ளவேயில்லை.

காம்பீர்
அதற்கு மாறாக இந்தியா- வங்கதேசம் விளையாடி வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக பணியாற்ற சென்றுவிட்டார். இந்த கூட்டத்தில் மொத்தம் 29 எம்பிக்களுக்கு பதிலாக வெறும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் காம்பீர் விவகாரம் பூதாகரமானது.
|
ஒட்டுமொத்த டெல்லி
இந்த நிலையில் டெல்லியில் ஐடிஓ பகுதிகளில் காம்பீர் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் காம்பீர் படத்தை போட்டு, இவரை காணவில்லை. யாரேனும் இவரை பார்த்தீர்களா? கடைசியாக இவர் ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்த டெல்லியே இவரை தேடுகிறது என அந்த போஸ்டரில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications