மிஷன் சக்தி சோதனை வெற்றி.. மோடி அதிரடி அறிவிப்பு-வீடியோ
விண்வெளியில் நடைபெற்ற மிஷன் சக்தி, சோதனை அபார வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இன்று காலை 11.45 மணி முதல் 12 மணி வரை உரையாற்றப்போவதாக மோடி அறிவித்ததும், நாடு முழுக்க பெரும் பரபரப்பு தொற்றியது. மாதந்தோறும் பேசுவதை போல ரேடியோ உரையாடல் இன்றி டிவி மூலமாகவும், இன்று உரையாற்றுவதாக அவர் அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள் இதோ:
Mar 27, 2019, 12:33 pm IST
இந்த சோதனை எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல- மோடி
விண்வெளியில் ஒரு செயற்கைக் கோளை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது
நமது சொந்த செயற்கைக்கோளையே நாம் சுட்டு வீழ்த்தியுள்ளோம்- மோடி
Mar 27, 2019, 12:32 pm IST
விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது
விண்ணில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
விண்வெளித்துறையில் உலகின் 4வது சக்தி மிகு நாடு இந்தியா
Mar 27, 2019, 12:31 pm IST
செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை சோதனை செய்து இந்தியா வெற்றி- மோடி
பூமிக்கு 300 கி.மீ. உயரத்தில் ஒரு செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த தொழில்நுட்பத்தை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது
Mar 27, 2019, 12:28 pm IST
நரேந்திர மோடி உரை ஆரம்பம்.. பரபரப்பில் நாடு
சிறிது நேரத்துக்கு முன் விண்வெளித்துறையில் மாபெரும் சாதனை படைத்துள்ளது இந்தியா- மோடி அறிவிப்பு
Mar 27, 2019, 12:25 pm IST
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த சில நாட்களாக நாட்டில் இல்லை
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக அஜித் தோவல் வெளிநாடு சென்றதாக தகவல்
முக்கிய தீவிரவாத அமைப்பு தலைவர் கொல்லப்பட்டிருக்கலாம் என யூகங்கள்