என்னாது.. 2 தடுப்பூசிகளையும் கலந்து.. ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாமா.. ஹூ சொல்வது என்ன?
2 தடுப்பூசிகளை சேர்த்து ஒன்றாக போடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
டெல்லி: 2 தடுப்பூசிகள் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் தற்போது எழுந்து வருகிறது.. ஆனால், இது ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உரிய விளக்கமும் தந்துள்ளது.
கொரோனா வைரஸ் என்பது என்ன என்ற ஆய்வுகள் ஒருபக்கம் தொடர்ந்து நடந்து வருகின்றன.. மற்றொரு பக்கம், அதற்குரிய மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இப்போதைக்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே.. அதனால் உலக நாடுகளும், தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

தடுப்பூசி
இந்நிலையில், அந்த தடுப்பூசிகள் குறித்த செய்திகளும் தினம் தினம் வெளியாகி கொண்டிருக்கின்றன.. தாய்லாந்து போன்ற ஒருசில நாடுகளில் 2 தடுப்பூசிகளை அதாவது வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதையடுத்து, 2 ஊசிகளை கலந்து ஒன்றாகவே போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் உருவாகி கொண்டிருக்கிறது.. ஆனால், இது சரியானதல்ல என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்..

விளக்கம்
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் இதை பற்றி சொல்லும்போது, "கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று சொல்வது சரியான நடவடிக்கை கிடையாது.. ஏனென்றால், உலக சுகாதார நிறுவனமே இன்னும் அது பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லை. .. இப்போதைக்கு குழப்பமான நிலைமைதான் உள்ளது..

சிபாரிசு
இப்படிப்பட்ட சூழலில், 2 வேறு வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சொல்வதும், அதற்கு சிபாரிசு செய்வதும் ஆபத்தைதான் ஏற்படுத்தும். இதற்கு உரிய தரவுகள், ஆய்வுகள் செய்தபிறகே, 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்" என்றார்.

கோரிக்கை
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனரும் டெட்ராஸ் அதனம் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில், ஒரு கோரிக்கையையும் விடுத்துள்ளார்.. அதில், "3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது கிடையாது.. ஆனால், அதுக்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

வேண்டுகோள்
ஏனென்றால், கொரோனா உயிரிழப்புகள் இந்த 10 வாரங்களாக உலகளவில் குறைந்து காணப்படுகிறது..ஆனால், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மறுபடியும் அதிகமாகி விட்டதால், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐநாவின் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications