"பாஜகவுக்கு செக்".. கை ஓங்குகிறது திமுக.. தேசிய அரசியலில் விஸ்வரூபம் எடுக்கிறாரா மு.க.ஸ்டாலின்!

தேசிய அளவில் முக ஸ்டாலின் முக்கியத்துவம் பெற போகிறார் என்று கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக தலைவர் முக ஸ்டாலின் தேசிய அளவில் உயர போகிறார் என்ற தகவல் பரபரத்து வருகிறது.

பீகாரை அடுத்து மேற்கு வங்கம் பக்கம் தன் கவனத்தை மொத்தமாக பாஜக திருப்பி வருகிறது.. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடக்க இருக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும்தான் கடுமையான, மற்றும் நேரடி போட்டி ஏற்பட உள்ளது... ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 மிஷன் பெங்கால்

மிஷன் பெங்கால்

அதேபோல, இந்த முறை மே.வங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக "மி‌ஷன் பெங்கால்" என்ற பெயரில் தேர்தல் பணிகளை அக்கட்சி தொடங்கி ஊக்குவித்து வருகிறது.. தேர்தல் நெருங்க நெருங்க, மம்தாவின் திரிணமுல் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை எல்லாம், தங்கள் பக்கம் இழுக்கத் துவங்கியுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்துள்ள மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம், பாஜகவை சமாளிப்பதற்கு ஆலோசனை கேட்டுள்ளார்.. அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்து, பிரமாண்டமான பேரணி நடத்தி, ஒற்றுமையை காட்டவும், மம்தா முடிவு செய்துள்ளாராம்.

 சரத்பவார்

சரத்பவார்

இதுதான் திமுக தரப்பினருக்கு குஷியை தந்து வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு, சரத் பவார் தலைமை வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை, காங்கிரசுடன் இணைத்துவிட்டு, புதிய காங்கிரஸ் தலைவராக அவரை பொறுப்பேற்க வைக்க முயற்சிகள் நடப்பதாக சொல்லப்பட்டது.. அப்போது, பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் அடங்கிய புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக சரத்பவார், துணைத்தலைவராக முக ஸ்டாலின், தேஜஸ்வீ பிரசாத் யாதவ், ஹேமந்த் சோரன் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

பங்களிப்பு

பங்களிப்பு

அதுபோலவே, இப்போதும் ஸ்டாலின் மே.வங்க அரசியலில் தன் பங்களிப்பை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தேசிய அளவில் ஸ்டாலினின் இந்த முன்னேற்ற பேச்சு, வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மேலும் பலத்தை தரும் என்றே நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+