எம்எல்ஏ பெயர்.. சிவப்பு விளக்கு சுழல, ஹாரன் அடித்தபடி வந்த சொகுசு கார்.. ஆடிப்போக வைத்த போலீஸ்
டெல்லி: நிறையே பேர் சொகுசு கார் வாங்கினாலும், தாங்கள் தான் விஐபி என்பது போலும், சாலையாக தங்களுக்காக போட்டது போலவும் கருதி பயணிப்பார்கள். சிலர் இன்னும் கூடுலாக சில அலப்பறைகளை செய்வார்கள். சொகுசு காரில், போலியாக எம்எல்ஏ, எம்பி என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வார்கள். அப்படியே அவர்களை போல் சைரன் வைத்து சத்ததுடன் காரில் செல்வார்கள்.. அப்படித்தான் லக்னோ சாலையில் ஒரு பளபளப்பான பிஎம்டபிள்யூ கார் வந்தது. அவருக்கு காவல் அதிகாரி ஒருவர் மறக்க முடியாத பாடத்தை கற்பித்துள்ளார். பார்ப்போம்.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள கோமதி நகர் விரிவாக்கப் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுதீர் அவஸ்தி என்பவர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். வெள்ளிக்கிழமை இரவு என்பதால் பலர் வீக்கெண்டில் மது அருந்திவிட்டு சாலையில் செல்வதை தடுக்கும் வகையில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அப்படித்தான் சோதனை நடந்தது. ஒவ்வொரு வாகனமாக இன்ஸ்பெக்டர் சுதீர் அவஸ்தி சோதனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு பிஎம்டபிள்யூ காரை மறித்தார். அதில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு நிற ஒளி மற்றும் ஹாரன் பொறுத்தப்பட்டிருந்தது. 'MLA' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

பிஎம்டபிள்யூ கார் பறிமுதல்
இதைக்கவனித்த இன்ஸ்பெக்டர் சுதீர் அவஸ்தி, யார் எம்எல்ஏ, சிவப்பு நிற சைரன் ஹாரன் எதற்கு பொருத்தியுள்ளீர்கள் என்று தீவிரமாக விசாரித்தார். அப்போது அந்த காரில் போலியாக விஐபிக்கள் பயன்படுத்தும் சிவப்பு நிறை சைரன் ஹாரன் பொறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். உடன அவர் வாகனத்தை பறிமுதல் செய்ய முடிவு செய்தார்.
ஏற்கனவே எழுதி இருந்தது
அப்போது அந்த இளம் ஓட்டுநர், "சார், நான் காரை வாங்கியபோது, ஹாரன் ஏற்கெனவே இருந்தது. 'MLA' என்றும் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்தது," என்று இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார். ஆனால், இன்ஸ்பெக்டர் அவஸ்தி அந்தப் பொய்யை ஏற்கவில்லை. "அப்படியானால், நீங்கள் ஏன் அதை அகற்றவில்லை?" என்று கேட்டதுடன், விஐபி சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் தீவிரத்தை அவருக்கு கூறி எச்சரித்தார்..
மன்னிப்பு கேட்டு கெஞ்சிய டிரைவர்
அதன்பின், அந்த டிரைவர் "சார், நான் செய்தது தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள்," என்று கெஞ்சினார். ஆனால் இன்ஸ்பெக்டர் சுதீர் அவஸ்தி உறுதியாக இருந்தார். "இப்படிப்பட்ட தவறுகளை கண்டுபிடிக்கத்தான் காவல்துறை உள்ளது. மீண்டும் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்கக் காவல்துறை உங்களுக்குப் பாடம் புகட்டும்," என்று கூறியதுடன், "காரைப் பறிமுதல் செய்யுங்கள்" என்று உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து, அந்த பிஎம்டபிள்யூ காரை போலீசார் உடனே பறிமுதல் செய்தனர்.
इंस्पेक्टर : लग्जरी गाड़ी है.. हूटर बज रहा है.. विधायक लिखा है.. कौन हो तुम!! विधायक हो??
— NCIB Headquarters (@NCIBHQ) November 14, 2025
लड़के : नहीं सर, गाड़ी खरीदी है.. हूटर पहले से लगा है.. विधायक भी पहले से लिखा था ..
इंस्पेक्टर : तो हटाया क्यों नहीं !!
लड़के : सर गलती हो गई.. माफ कर दीजिए..
इंस्पेक्टर : ऐसी गलती के… pic.twitter.com/6hG9lo7aM6
நெட்டிசன்கள் கூறுவது என்ன
இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மேலும் அந்த வீடியோ 82,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. பல நெட்டிசன்கள் இன்ஸ்பெக்டர் சுதீர் அவஸ்தியின் விரைவான நடவடிக்கை நெகிழ்ந்து பாராட்டினார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், "இவர்கள்தான் உண்மையான போலீஸ்! பிராண்டட் கார், MLA ஸ்டிக்கர், சைரன் ஆர்ப்பாட்டம் - அனைத்தும் 2 வினாடிகளில் அடங்கிப் போச்சு," என்று கூறியிருந்தார். இன்னொரு நெட்டிசன், "இன்ஸ்பெக்டர் சார், சரியான வேலையை செய்து விட்டீர்கள், நாட்டிற்கு உங்களைப் போன்ற அதிகாரிகள் அதிகம் தேவை," என்று கூறியிருந்தார். யாருக்கும் வளைந்து கொடுக்காத அணுகுமுறையைப் பாராட்டினார். அதே நேரத்தில், சலுகைகளைக் காட்டும் இத்தகைய காட்சிகள் அசாதாரணமானது அல்ல என்றும் சில நெட்டிசன்கள் கூறினார்கள்.
கிராமங்களில் கூட பார்க்க முடியும்
ஒரு நெட்டிசன், "பெரும்பாலும், கிராமப்புற நடைபாதைகள் மற்றும் மண் சாலைகளில் கூட கார்கள் சைரனில் ஹாரன் அடித்துச் செல்வதைக் காண முடியும். உத்தரப் பிரதேசத்தில், அனைவருக்கும் ஒரு 'MLA மாமா' இருக்கிறார். இந்தியா ஒரு அந்தஸ்து சார்ந்த சமூகம். அங்கு அந்தஸ்து என்றால், எவ்வளவு தற்பெருமையும் காட்டுவார்கள்.. அதனை வைத்து தற்பெருமையும் காட்டுவார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
இதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம்
மற்றொரு நெட்டிசன், வாகனங்களில் விஐபிக்கள் பயன்படுத்தும் சைரன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதுதான் உத்தரப் பிரதேசத்தின் நிலை, மக்கள் தங்கள் கெத்தைக் காட்டுவதற்காக பொலிரோ முதல் ஆல்டோ வரை எல்லாவற்றிலும் விஐபிக்களை போல் சைரன் ஹாரன்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். இந்த தம்பி ஓட்டுவதும் செகண்ட் ஹேண்ட் கார், ஆனா கெத்தைக் காட்ட வேண்டும் என்று இப்படி ஹாரன் பொறுத்தி சிக்கியுள்ளார் என்று நெட்டிசன் கூறியுள்ளார். பலர் காவல் துறையின் நடவடிக்கையைப் பாராட்டுவதுடன், மாநிலத்தில் இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது என்ற கருத்துக்களையும் இணைத்து பதிவிட்டு வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications