நேற்று அசாம்-இன்று சிக்கிம்! வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்..மக்கள் அச்சம்
நேற்று மாலை அசாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நேற்று அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா குலுங்கியது. நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு வானுயர்ந்த கட்டிடங்கள் பலவும் நொடிப்பொழுதில் தரைமட்டம் ஆகின.

பலி 34 ஆயிரத்தை தாண்டியது
கட்டிட இடிபாடுகளுக்குள்ளும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர். நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்து விட்ட போதிலும் அங்கு கட்டிட இடிபாடுகளை தோண்ட தோண்ட இன்னும் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் இரு நாடுகளிலும் சேர்த்து நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சர்வதேச அளவிலும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவில் நிலநடுக்கம்
இந்தியாவிலும் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் பலரும் எச்சரித்து இருந்தனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்தியாவில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நேபாளம், ஆப்கானிஸ்தானில் ஏற்படும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இங்கு உணரப்படுவதும் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதுமாக உள்ளது.

சிக்கிமில் அதிகாலையில் நிலநடுக்கம்
இந்த நிலையில் நேற்று அசாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நேற்று மாலை 4.20 மணியளவில் அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.15 மணிக்கு சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

மக்கள் அச்சம்
சிக்கிமின் யுக்சோம் நகரத்திற்கு வடமேற்கே 70 கி.மீட்டர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். கடுமையான குளிர் நிலவியபோதும் சில இடங்களில் மக்கள் நிலநடுக்க அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியில் நின்றதையும் பார்க்க முடிந்தது. வடகிழக்கு மாநிலங்களில் 12 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இரு நிலநடுக்கங்களும் மிதமானதுதான் என்றாலும் சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அது ஏற்படுத்திய சேதமும் மக்கள் மத்தியில் சற்று கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications