கேபினட் பொறுப்பு வழங்க பாஜக மறுப்பு.. அஜித் பவாரின் என்சிபி கடும் அப்செட்?
டெல்லி: மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து தராததால் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. இதனால் கூட்டணி கட்சிகளிடம் உள்ள 52 எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருடன் பாஜக எம்பிக்கள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் என மொத்தம் 30 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து தராததால் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேபினட் அமைச்சராக இருந்த பிரபுல் படேலுக்கு தனி பொப்றுப்புடன் கூடிய இணை அமைச்சர் பொறுப்பு தர பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், பாஜக மீது தேசியவாத காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் இணைய மேலும் சில காலம் காத்திருப்பதாக அஜித் பவார் கூறியுள்ளார்.
மகராஷ்டிர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 17 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பாஜக 9 இடங்களையும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களையும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றின.
கடந்த 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக -23, ஒன்றுப்பட்ட சிவசேனா- 18 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ்-1, தேசியவாத காங்கிரஸ்-4 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி மற்றும் சுயேச்சை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை பாஜக கூட்டணிக்கு பின்னடைவே ஏற்பட்டது.
இந்தியா' கூட்டணி 30 தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 13 தொகுதிகளை கைப்பற்றியது. உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா 9 தொகுதிகளிலும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்திர பவார் கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications