Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடி கேபினட் 3.O.. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அமைச்சர்கள்? முழு டேட்டா இதோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி உள்பட 72 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இதில் மாநிலம் வாரியாக எந்தெந்த மாநிலங்களில் இருந்து எத்தனை அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. 543 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம்.

narendra modi bjp oath ceremony nda cabinet ministers

கடந்த இரண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற்ற நிலையில், 18-வது லோக்சபா தேர்தலில் 240 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக நேற்று மோடி பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் அமைச்சர்களாக 71 பேரும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதில், ரஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்பட கேபினட் அமைச்சர்களாக 30 பேரும், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சார்களாக 5 பேரும், இணை அமைச்சர்களாக 36 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். மோடி அமைச்சரவையில் இந்த முறை புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக எந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் அதிகம் இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்த விவரம் வருமாறு:-

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருந்து 10 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். உத்தர பிரதேசத்தில் பாஜக கடந்த முறை 62 தொகுதிகளில் வெற்றி பெற்றும் இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு இது பெரும் அடியாக இருந்தது.

எனினும், அமைச்சரவையில் அதிக இடங்களை உத்தர பிரதேசத்திற்கே கொடுத்துள்ளது. உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகாரில் இருந்து 8 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதற்கு அடுத்ததாக குஜராத் (5), கர்நாடகா (5), மத்திய பிரதேசம் (4), ராஜஸ்தான் ((4), ஜார்க்கண்ட் (4), ஆந்திர பிரதேசம் (3), ஹரியானா (3), ஒடிஷா (3), மேற்கு வங்கம் (2) , கேரளா (2), தெலுங்கானா (2), அசாம் (2), கோவா (1), தமிழ்நாடு (1), ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

உத்தர பிரதேசம் - 8

ஹர்தீப் சிங்பூரி
ராஜ் நாத் சிங்
ஜெயந்த் சவுத்ரி (ஆர்.எல்.டி)
ஜிதின் பிரசதா
பங்கஜ் சவுத்ரி,
பி.எல்.வெர்மா,
அனுப்ரியா படேல் (அப்னா தள்)
கம்லேஷ் பாஸ்வான்
எஸ்பி சிங் பாகேல்
கீர்த்தி வர்தன் சிங்

பீகார்- 7
சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி -ராம்விலாஸ்)
கிரிராஜ் சிங்
ராம்நாத் தாகூர் (ஜேடியு)
லானன் சிங் (ஜேடியு)
நித்யானந்த் ராய் (பாஜக)
ராஜ் பூஷன் சவுத்ரி (விகாஷீல் இன்சான் கட்சி)
சதிஷ் துபே (பாஜக)

குஜராத் - 5
அமித்ஷா,
ஜெய்சங்கர்,
சி.ஆர் பாட்டீல்
நிமுபென் பம்பானியா

கர்நாடகா - 5
நிர்மலா சீதாராமன் (பாஜக)
ஹெச்.டி குமாரசாமி ( ஜேடிஎஸ்)
பிரகலாத் ஜோஷி,
ஷோபா
வி சோமன்னா

மகாராஷ்டிரா- 5
பியூஸ் கோயல்
நிதின் கட்காரி
பிரதாப் ராவ் ஜாதவ் (சிவசேனா)
ரக்‌ஷா கட்சே
ராம்தாஸ் அத்வாலே (ரிபப்ளிக் பார்டி ஆப் இந்தியா)

மத்திய பிரதேசம் - 4
சிவராஜ்சிங் சவுகான்
ஜோதிராதித்ய சிந்தியா
சாவித்ரி தாகூர்,
வீரேந்திர குமார்

ராஜஸ்தான் - 4
கஜேந்திர சிங் சேக்வாத் (பாஜக)
அர்ஜூன் ராம் மேக்வால் (பாஜக)
பூபேந்திர யாதவ் (பாஜக)
பகிரத் சவுத்ரி (பாஜக)

ஒடிஷா - 3
அஷ்வினி வைஷ்ணவ்,
தர்மேந்திர பிரதான்
ஜூயல் ஓரம்

ஹரியானா - 3
மனோகர்லால் கட்டார் (பாஜக)
கிரிஷன் பால் குர்ஜர் (பாஜக)
ராவ் இந்திரஜித் சிங் (பாஜக)

ஆந்திர பிரதேசம் - 3
சந்திர சேகர பெம்மாசனி (தெலுங்கு தேசம்)
ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்)
ஸ்ரீனிவாச வர்மா (பாஜக)

தெலுங்கானா - 2
ஜி கிஷன் ரெட்டி (பாஜக)
பாண்டி சஞ்செய் (பாஜக)

ஜார்க்கண்ட் - 2
சந்திரசேகர் சவுத்ரி (ஏஜேஎஸ்யூ)
அன்னபூர்ண தேவி (பாஜக)

மேற்கு வங்கம் - 2
சாந்தனு தாகூர் (பாஜக)
சுகாந்தா மஜும்தார் (பாஜக)

அசாம் - 2
சர்பந்தனா சோனாவால் (பாஜக)
பபித்ரா மார்கெரிட்டா (பாஜக)

ஒரே ஒரு அமைச்சர்கள்:

* தமிழ்நாடு - எல் முருகன் (பாஜக)
* கேரளா - சுரேஷ் கோபி (பாஜக)
* டெல்லி - ஹர்ஸ் மால்கோத்ரா (பாஜக)
* உத்தரகாண்ட் - அஜய் தம்தா (பாஜக)
* பஞ்சாப் - ரவ்னீத் சிங் பிட்டு (பாஜக)

* கோவா- ஷிரிபாத் நாயக்
* ஜம்முகாஷ்மீர்: ஜிதேந்திர சிங்
* இமாச்சல பிரதேசம்: ஜேபி நட்டா
* அருணாச்சல் பிரதேசம் - கிரண் ரிஜிஜூ (பாஜக).

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+