டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் போது தான் பேசிய இந்தி மொழியை பியர் கிரில்ஸ் எவ்வாறு புரிந்து கொண்டார் என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதை பேரி கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை கலந்து கொள்ள வைத்து அவர்களை கிரில்ஸ் சாதனை செய்ய வைப்பார்.

இந்த நிலையில் இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு பேரி கிரில்ஸ் அழைப்பு விடுத்தார். அதையேற்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிம் கார்ப்பெட் பூங்காவில் கலந்து கொண்டார்.

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

இந்த நிகழ்ச்சி சுதந்திர தினத்துக்கு முன்பு ஒளிப்பரப்பானது. இதில் பியரி கிரில்ஸுக்கு இந்தி தெரியாது. மோடியோ இந்தி பேசுவார். எனினும் மோடி இந்தியில் பேச அதற்கு கிரில்ஸ் ஆங்கிலத்தில் பதில் சொல்ல, அதை மோடி புரிந்து கொண்டு மீண்டும் பேச... இப்படியே நிகழ்ச்சி போனது.

சந்தேகம்

சந்தேகம்

ஆனால் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். இது எப்படி சாத்தியம் என்பது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சி குறித்து ஏராளமானோர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

கார்டுலெஸ் கருவி

கார்டுலெஸ் கருவி

இதில் அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமே எங்களுக்கு பாலமாக இருந்தது. பியர் கிரில்ஸ் இந்திமொழியை உடனடியாக புரிந்து கொள்ளும் வகையில் மொழிமாற்றம் செய்யும் கார்டுலெஸ் கருவி இருவருக்கும் இடையே இணைக்கப்பட்டிருந்தது.

விளக்கம்

விளக்கம்

இந்த கருவியால்தான் நான் இந்தியில் பேசியதற்கு கிரில்ஸ் எளிதில் புரிந்து கொண்டு எனக்கு தேவையான விளக்கங்களை அளித்தார் என்றார் மோடி. நிகழ்ச்சியில் பிரதமர் உடன் எப்போதும் இருக்கும் பாதுகாப்பு வீரர்கள் கேமராவுக்கு பின் இருந்தனர்.

English summary
PM Narendra Modi explains how Bear Grylls explains Hindi language in Man Versus Wild.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X