"மோடி அரசு மிடில் கிளாஸ் மக்கள் முதுகில் குத்திவிட்டது.." லிஸ்ட் போட்டு சாடிய ராகுல் காந்தி
டெல்லி: லோக்சபாவில் இப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கல்வித் துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், மத்திய அரசு மிடில் கிளாஸ் மக்களின் முதுகில் குத்திவிட்டதாகச் சாடினார்.
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் ராகுல் காந்தி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசினார்.
அப்போது ராகுல் காந்தி மத்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். நாடு முழுவதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு தகவலும் இல்லை என்று விமர்சித்தார். பட்ஜெட்டில் கல்வித்துறைக்குக் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்ற அவர், அக்னிவீர் திட்டத்திற்கான ஓய்வூதியம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்றும் அவர் சாடினார்.
மேலும், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் நாட்டின் தொழில்துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "கொரோனா சமயத்தில் தட்டுகளைத் தட்டவும், மொபைல் போன் டார்ச்களை அடிக்கவும் சொன்னார் மோடி. அதை எல்லாம் செய்த மிடில் கிளாஸ் மக்களின் முதுகிலும் மார்பிலும் மோடி அரசு குத்திவிட்டது" என்றார்.
ரயில்வே மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளின் ஒப்பந்தங்கள் இரு பெரும் தொழிலதிபர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். ராகுல் காந்தி அதானி, அம்பானி பெயர்களைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேச எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவையின் மாண்பை ராகுல் காந்தி சீர்குலைக்க முயல்வதாகவும் சபாநாயகருக்கே சவால் விடுப்பதாகவும் சாடினார். இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில், அவையில் ஒரு குழப்பமான சூழலே நிலவி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications