ஆவணங்களை கொளுத்தினாலும் மோடி தப்பிக்க முடியாது.. சாஸ்திரி பவன் தீ விபத்து பற்றி ராகுல் பகீர்!
சாஸ்திரி பவன் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்த டிவிட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: டெல்லி சாஸ்திரி பவன் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்த டிவிட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரிபவன் கட்டிடம் மிகவும் புகழ்பெற்றது. முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் தினமும் இங்கு வந்து செல்வார்கள்.

அரசின் மிக மிக முக்கியமான ஆவணங்கள் எல்லாம் இந்த பகுதியில் தான் பாதுகாத்து வைக்கப்படும். இதனால் இங்கு எப்போதும் அதிக பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்.
இந்த நிலையில் இன்று சாஸ்திரிபவன் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இங்கு தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Modi ji burning files is not going to save you. Your day of judgement is coming. https://t.co/eqFvTJfDgY
— Rahul Gandhi (@RahulGandhi) April 30, 2019
இதுகுறித்து தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். அதில், மோடி, நீங்கள் இப்படி ஆவணங்களை கொளுத்துவது உங்களை கண்டிப்பாக காப்பாற்றாது. உங்களுக்கான தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது, என்று கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
பாஜகதான் இப்படி முக்கிய ஆவணங்களை அழிப்பதாக ராகுல் காந்தி மறைமுகமாக குற்றஞ்சாட்டுகிறார் என்று பலர் அவரது டிவிட்டிற்கு பதில் அளித்து வருகிறார்கள்.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications