அனில் அம்பானிக்கு உதவுவது போல மக்களுக்கும் உதவுங்கள் மோடி.. ராகுல் காந்தி பரபரப்பு விமர்சனம்!
அனில் அம்பானிக்கு உதவுவது போல மக்களுக்கும் பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி: அனில் அம்பானிக்கு உதவுவது போல மக்களுக்கும் பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐந்து மாநில தேர்தல் வெற்றிக்கு பின் மிகவும் தீவிரமாக அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். நாடாளுமன்றம், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் இவர் பேசுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென்று அடித்து ஆட தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறது. நேற்று பிரதமர் மோடி குறித்து ராகுல் நிறைய குற்றச்சாட்டுகளை அடிக்கினார்.

ராகுல் காந்தி பேட்டி
நேற்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் என்று மொத்த நாட்டையும் பாழாக்கிவிட்டார். காங்கிரஸ் லோன் தள்ளுபடி செய்வதை அவர் கிண்டல் செய்கிறார். ஆனால் அவரின் குஜராத் மாநிலத்தில்தான் விவசாயிகள் லோன் தள்ளுபடி கேட்டு போராடி வருகிறார்கள். இது அவருக்கு தெரியுமா என்று கூற தெரியவில்லை.

வேலைவாய்ப்பு
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு வேலை போய் இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி அதை பற்றி பேசுவதே இல்லை. 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக வாக்குறுதி அளித்த மோடி, இப்போது இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்து இருக்கிறார்.

அம்பானி
பிரதமர் மோடி அனில் அம்பானிக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார். அனில் அம்பானிக்கு உதவுவது போல மக்களுக்கும் பிரதமர் மோடி உதவ வேண்டும். மோடி மக்கள் மீது எப்போதுதான் கவனம் செலுத்துவார். அவர் இப்படியே இருந்தால் இளைஞர்களின் எதிர்காலம் மோசமாகிவிடும்.

காங்கிரஸ் என்ன செய்தது
காங்கிரஸ் கட்சி இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டது. ஆனால் மோடி டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி மூலம் இந்தியாவின் வளர்ச்சியை பாழாக்கினார். அவர் யார் பேச்சையும் கேட்காத, எதற்கும் தகுதி இல்லாத நபர், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications