Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் புதிய அமைச்சரவையில் கடந்த முறை அமைச்சர்களாக இருந்த அந்த 'முக்கிய' 11 பேருக்கு கல்தா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Modi's New Cabinet: கடந்த அமைச்சரவையில் இருந்த 11 பேர் நீக்கம்- வீடியோ

    டெல்லி: மோடியின் அமைச்சரவையில் கடந்த முறை முக்கிய அமைச்சர்களாக இருந்த 11 பேருக்கு இம்முறை பதவி வழங்கப்படவில்லை.

    நாடாளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெற்றதை தொடர்ந்து மத்தியில் மீண்டும் பாஜக தலைமையில் அரசு அமைந்துள்ளது. இதற்கான பதவியேற்பு விழா நேற்று பிரமாண்டமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.இந்த விழாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விருந்தினர்கள் என 8000 பேர் பங்கேற்றனர். கடந்த முறை மோடி பிரதமராக பதவியேற்றபோது 5000 விருந்தினர்கள் பங்கேற்ற நிலையில் இம்முறை கூடுதலாக 3000 பேர் பங்கேற்றனர்.

    இதனால் குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண மின் விளக்குகள் , அழகிய மலர்கள் என அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. விருந்தினகர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் பல்வேறு வகைகளில் பரிமாறப்பட்டது. பிரதமர் மோடிக்கும் அவரது அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    மோடி அமைச்சரவையில் மொத்தம் 57 பேர் மத்திய அமைச்சர்கள், தனிப்பொறுப்பு அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் என பதவி பெற்றுள்ளனர்.இதில் பல புது முகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்தமுறை பல முக்கிய பொறுப்புகளை வகித்த 11 பேருக்கு இம்முறை அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை.

    அருண் ஜேட்லி

    அருண் ஜேட்லி

    வழக்கறிஞரான அருண்ஜேட்லி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவர். கடந்த 2014ஆம் ஆண்டு அவர் அமைச்சராக பதவியேற்றபோது, நிதித்துறை, பாதுகாப்பு, தகவல் தொடர்பு என மூன்று முக்கிய துறைகளின் பொறுப்பை வழங்கினார் பிரதமர் மோடி. கடந்த 5 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்த அருண்ஜேட்லி பொருளாதார சட்டத்தை திசைதிருப்பினார். மேலும் சர்ச்சைக்குரிய கொள்கைகளில் இருந்து அரசை பாதுகாத்தார். தற்போது 66 வயதான அருண்ஜேட்லி, தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை செய்து கொண்ட அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். தனது உடல்நலத்தை காரணம் காட்டி இம்முறை தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என அருண் ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    சுஷ்மா ஸ்வராஜ்

    சுஷ்மா ஸ்வராஜ்

    அடுத்தப்படியாக சுஷ்மா ஸ்வராஜ். கடந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அவர் இம்முறை மோடியின் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. நேற்றைய பதவியேற்பு விழாவில் சுஷ்மா பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. 67 வயதான சுஷ்மா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான அமைச்சராக இருந்தார். டிவிட்டர் வாயிலாக கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனுக்கு உடல் பதிலளிப்பதோடு, உதவிகளையும் செய்து வந்தார்.

    ராஜ்யவர்தன் ரத்தோர்

    ராஜ்யவர்தன் ரத்தோர்

    ஒலிம்பிக் வீரரான ராஜ்யவர்தன் பழைய மற்றும் பல புதிய முகங்களை கொண்ட மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அவருக்கு நேற்று நடைபெற்று மோடியுடனான சந்திப்பு குறித்து எந்த அழைப்பும் வரவில்லை என கூறப்படுகிறது. 49 வயதான ரத்தோர் ராஜஸ்தானில் இருந்து பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேனகா காந்தி

    மேனகா காந்தி

    மோடியின் புதிய அமைச்சரவையில் மேனகா காந்திக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் மேனகா காந்தி நாடாளுமன்ற லோக்சபாவின் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 62 வயதான மேனகா 4 முறை மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த முறை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உமா பார்தி

    உமா பார்தி

    உமா பார்திக்கும் இம்முறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அவர் கடந்த ஆண்டே லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார். மாறாக கங்கை நதியை சுத்தப்படுத்தப்போவதாகவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்போவதாகவும் கூறியிருந்தார். 59 வயதான உமாபார்தி குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக கடந்த முறை பொறுப்பு வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது கங்கை மறுசீரமைப்பு மற்றும் நீர்வழி வளங்கள் ஆகியவை அவருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு பாஜகவின் துணை தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுரேஷ் பிரபு

    சுரேஷ் பிரபு

    கடந்த முறை வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவுக்கும் இம்முறை அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 63 வயதான சுரேஷ் பிரபு சிவசேனா கட்சியில் 2014ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவர் ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார். மகாராஷ்டிராவில் இருந்து 4 முறை ராஜ்ய சபா எம்பியாக பதவி வகித்து வந்தார். தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ளார் சுரேஷ் பிரபு.

    ராதா மோகன் சிங்

    ராதா மோகன் சிங்

    கடந்த முறை விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக இருந்நத ராதா மோகன் சிங்கிற்கு இம்முறை மத்திய அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. இம்முறை பீகாரின் புர்வி சாம்பரான் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ராதாமோகன் சிங்க 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அவர் அமைச்சராக இருந்த காலத்தில் தான் நாடு முழுவதும் அதிகளவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேஜே அல்போன்ஸ்

    கேஜே அல்போன்ஸ்

    அல்போன்ஸ் கடந்த முறை தனிப்பொறுப்புடன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால் இம்முறை அமைச்சரவை பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. 65 வயதான அல்போன்ஸ் கேரளாவின் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயந்த் சின்கா

    ஜெயந்த் சின்கா

    கடந்த முறை விமான போக்குவரத்து இணையமைச்சராக இருந்த ஜெயந்த் சின்காவுக்கு இம்முறை பதவி வழங்கப்படவில்லை.முதலில் அவருக்கு நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்க்ப்பட்டது. ஜெயந்த் சின்கா பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவின் மகன் ஆவார். ஜார்கண்ட் மாநிலம் ஹஸாபாக்கில் இருந்து இரண்டாவது முறையாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஜேபி நட்டா

    ஜேபி நட்டா

    ஜேபி நட்டா கடந்த முறை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இம்முறை அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. இவர் பாஜக தலைவராக பொறுப்பேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சாராக பொறுப்பு வகித்தார் ஜேபி நட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் கோயல்

    விஜய் கோயல்

    விஜய் கோயல் கடந்த முறை நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக பதவி வகித்து வந்தார். அவருக்கும் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+