பாதுகாப்பு அதிகாரி உடனில்லை... போக்குவரத்து நிறுத்தமில்லை ... குருத்வாராவில் மோடி திடீர் தரிசனம்!
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவிற்கு நேற்று திடீரென சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் உடன் செல்லவில்லை எனவும், போக்குவரத்தும் தடை விதிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.
வேளாண் சட்டங்களை கண்டித்து 25-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி குருத்வாராவில் தரிசனம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவிற்கு நேற்று திடீரென சென்றார். அங்கு தரிசனம் செய்த அவர் குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலியும் செலுத்தினார்.வழக்கமாக பிரதமர் மோடி எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கபடும். பாதுகாப்பு அதிகாரிகள் உடன் செல்வார்கள். அந்த பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்படும்.

ஆனால் பிரதமர் மோடி நேற்று குருத்வாராவிற்கு சென்றபோது, எந்த பாதுகாப்பு அதிகாரியும் உடன் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை என்றும் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை எனவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருத்வாராவில் தரிசனம் செய்தது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- இன்று காலை, ஸ்ரீகுரு தேஜ் பகதூர்ஜி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, வரலாற்று சிறப்பு மிக்க ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் தரிசனம் செய்தேன். மிகவும் பாக்கியவானாக, ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன்.
ஸ்ரீகுரு தேஜகபகதூரின் அன்பில் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் நானும் ஒருவன். ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் கொள்கைகளை கொண்டாடுவோம் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த பதிவுடன் குருத்வாராவில் தரிசனம் செய்த போட்டோக்களையும் பிரதமர் மோடி இணைத்து இருந்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பிரதமர் மோடி நேரடியாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ள நிலையில் பிரதமர் மோடி குருத்வாராவில் தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications