நூற்றாண்டு பெருமை கொண்ட கால்பந்து கிளப்பை கத்திரிக்காய் என கூறிய மத்திய அமைச்சர்! BJPக்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்கத்தை சேர்ந்த 'மோகன் பாகன்' மற்றும் 'ஈஸ்ட் பெங்கால்' கால்பந்து கிளப்கள், ஆசியாவின் மிகவும் பழமை வாய்ந்த கால்பந்து கிளப்களில் ஒன்றாகும். ஆனால், இந்த அணியின் பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தவறாக உச்சரித்திருப்பது மேற்கு வங்கத்தில், பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ரியல் மேட்ரிட் vs பார்சிலோனா மேட்ச்சை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக ஒன்று கூடுவார்கள். அந்த அளவுக்கான ரசிகர்கள் கூட்டம் மோகன் பாகன் மற்றும் ஈஸ்ட் பெங்கால் மேட்சை பார்க்க திரளும்.

Mansukh Mandaviya TMC BJP

பிரிட்டிஷ் அணியை வீழ்த்திய பெருமை

இந்த அணிகள் நூற்றாண்டு பழமை வாய்ந்தது மட்டுமல்லாது, மேற்கு வங்க மக்களுடன் உணர்வு ரீதியில் பின்னி பிணைந்துள்ளன. 1889ல் உருவாக்கப்பட்ட மோகன் பாகன் கால்பந்து கிளப், 1911ல் ஷூ அணியாமல் விளையாடி, பிரிட்டிஷ் ராணுவத்தின் 'ஈஸ்ட் யார்க்ஷயர் ரெஜிமெண்ட்' அணியை தோற்கடித்து IAF Shield கோப்பையை வென்றது.

சுதந்திர போராட்ட வெறி

இந்த வெற்றி இந்திய சுதந்திர போராட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் அல்ல என்கிற உண்மையை உணர்த்தியது. எனவே இந்த அணி, 'தேசிய கிளப்' என்றும் அழைக்கப்படுகிறது.

'ஈஸ்ட் பெங்கால்' வரலாறு

அதேபோல 'ஈஸ்ட் பெங்கால்' அணிக்கும் பாரம்பரியம் இருக்கிறது. 1920ல் தொடங்கப்பட்ட இந்த அணி, கிழக்கு வங்காகளத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களின் அடையாளமாக இருக்கிறது. அந்த காலத்தில் கிழக்கு வங்க மக்களுக்கு பெரிய அளவில் மரியாதையெல்லாம் கிடையாது. எனவே இந்த புலம்பெயர் மக்களின் இருப்பை நிலை நாட்ட இந்த அணி பெரிய அளவுக்கு உதவியது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டியை பார்க்க குறைந்தது 1 லட்சம் பேர் கூடுவார்கள்.

சர்ச்சை பேச்சு

இப்படி இருக்கையில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் தொடக்கம் குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது இரு அணிகளின் பெயர்களை மோகன் பாகன் மற்றும் ஈஸ்ட் பெங்கால் என்று சொல்வதற்கு பதில், மோகன் 'பைங்கான்' மற்றும் ஈஸ்ட் 'பைங்கான்' என்று கூறியிருந்தார். சில விநாடிகளில், ஈஸ்ட் பெங்கால் பெயரை மட்டும் சரியாக திருத்தி உச்சரித்திருந்தார்.

கத்திரிக்காய் கிளப்கள்

இந்தி மொழியில் 'பைங்கான்' எனில் கத்திரிக்காய் என்று அர்த்தம். இதனால் பாஜகவுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் விமர்சனங்கள் வெடித்துள்ளன. "மோடி அரசின் கீழ், விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பெங்காலின் 100 ஆண்டுகாலப் பழமையான கால்பந்து கிளப்களின் பெயர்களைக் கூட உரிய மரியாதையுடன் உச்சரிக்கவில்லை. அவற்றின் சரியான பெயர்கள் மோகன் பாகன் மற்றும் ஈஸ்ட் பெங்கால்.

இந்த கிளப்கள் பெங்காலின் அடையாளம். வங்காள விரோத சக்திகள் அவற்றைப் வெறுப்புடனும் அவமரியாதையுடனும் பார்க்கின்றன. கால்பந்து என்பது பெங்கால் மக்களின் இரத்தத்தில் ஓடுகிறது. இதை வெளியாட்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்" என்று திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவை விமர்சித்திருக்கிறது.

ஆனால், இது சாதாரண சின்ன மிஸ்டேக். இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று பாஜக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+