அடுத்த பெருந்தொற்றாக வெடிக்கும் மங்கி பாக்ஸ்? "இந்த" ஒரு மேட்டர் முக்கியம்.. சமாளிக்க முடியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மங்கி பாக்ஸ் இப்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஒரு வேளை மங்கி பாக்ஸ் வேகமாகப் பரவ தொடங்கினால் அதைத் தடுக்க நாம் தயாராக இருக்கிறோமா.. தடுப்பூசி இருக்கிறதா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான பதிலை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

மங்கி பாக்ஸ் பல காலமாகப் பரவி வந்தாலும் கூட இப்போது அதன் பரவல் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கிறது. பலரும் எங்கு இந்த மங்கி பாக்ஸ் கொரோனா போல மோசமான பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அஞ்சுகிறார்கள்.

mpox Virus Monkey Pox Virus Kurangu ammai

மங்கி பாக்ஸ்: அதற்கேற்ப உலக சுகாதார அமைப்பும் கூட மங்கி பாக்ஸ் பாதிப்பு காரணமாகச் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அறிவிக்கும் உச்சபட்ச எச்சரிக்கை இதுவாகும். மங்கி பாக்ஸ் பாதிப்பைத் தடுக்கவும் அதன் பாதிப்பைக் குறைக்கவும் உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த எச்சரிக்கை உணர்த்துகிறது.

முக்கியமான மேட்டர்: இதுவரை மங்கி பாக்ஸ் பாதிப்புக்குத் தடுப்பூசிகள் இல்லை. ஆனால், டென்மார்க்கின் பவேரியன் நோர்டிக் என்ற நிறுவனம் இதற்கான வேக்சினை உருவாக்கியது. கடந்த 2022இல் மங்கி பாக்ஸ் இதேபோல பொதுச் சுகாதார அவசர நிலையை ஏற்படுத்திய போது இந்த நிறுவனத்தின் வேக்சினுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து அனுமதி வழங்கின. இதன் 2 டோஸ் வேக்சின் மங்கி பாக்ஸ் பாதிப்பை 85%-90% வரை தடுப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வேளை மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரித்தால் இந்த வேக்சின் தேவை அதிகரிக்கும்.

இது தவிர ஜெர்மனி நாட்டை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தில் மங்கி பாக்ஸுக்கான வேக்சினை உருவாக்கி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சீரம் நிறுவனம் இந்த வேக்சினை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.. ஆனால், சீரம் நிறுவனத்தின் வேக்சின் பயன்பாட்டிற்கு வரக் குறைந்தது ஓராண்டு ஆகும் என்றே சொல்லப்படுகிறது.

மத்திய அரசு: வேக்சின் ஒரு பக்கம் இருக்க மத்திய அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே டெல்லியில் 3 மருத்துவமனைகள் மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குச் சிகிச்சை அளிக்கத் தயார் நிலையில் உள்ளன. அதேபோல மங்கி பாக்ஸ் சோதனைகளை மேற்கொள்ளவும் நாடு முழுக்க 42 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்குக் கூடுதல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதற்கு முன்பு 2022இல் பங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், மத்திய அரசு எடுத்த துரித நடவடிக்கைகளால் அது விரைவாகக் கட்டுக்குள் வந்துவிட்டது.

தீவிரம்: இந்த வெடிப்பு என்பது முன்பு பரவியதை விட தீவிரமான வேரியண்ட் காரணமாக ஏற்படுகிறது. முதலில் காங்கோ குடியரசில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்துத்து புருண்டி, ருவாண்டா மற்றும் கென்யா என பல நாடுகளுக்கும் இது பரவியது. அவ்வளவு ஏன் ஸ்வீடன், பாகிஸ்தான் நாடுகளிலும் இந்த பாதிப்பு உறுதியானது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 116 நாடுகளில் 99,000+ பேருக்கு மங்கி பாகஸ் ஏற்பட்டுள்ளது. மேலும், 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமாளிக்க முடியுமா: அதேநேரம் இந்த மங்கி பாக்ஸ் கொரோனா அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் கொரோனா காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. ஆனால், மங்கி பாக்ஸ் அப்படி இல்லை நோயாளியுடன் நேரடி தொடர்பில் இருந்தால் மட்டுமே பரவும். இது மட்டுமின்றி நம்மிடம் வேக்சினும் கைவசம் இருப்பதால் பாதிப்பு மோசமாக இருக்காது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+