குரங்கு அம்மை எப்படி பரவுகிறது? தடுப்பது எப்படி? இதன் அறிகுறிகள் என்னென்ன?
டெல்லி: குரங்கு அம்மை என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ் நோய் ஆகும். அதாவது இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். ஆப்ரிக்காவில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஆய்வக குரங்கிலிருந்து முதன்முதலில் இந்த வைரஸ் எடுக்கப்பட்டதால் இது குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. குரங்கு மற்றும் பெரியம்மை வைரஸ்கள் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவை.
இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் இந்த வைரஸ் தற்போது எண்டமிக் என்ற நிலையை அடைந்துவிட்டது.
அதாவது ஒரு வைரஸ் அல்லது நோய் ஒரு குழுவிற்கு இடையே பலருக்கு பரவி, பலருக்கு அதன் எதிர்ப்பு சக்தி வந்து, பின்னர் சீசனுக்கு சீசன் ஏற்படும் காய்ச்சல் போல மாறினால் அந்த வைரஸ் அல்லது எண்டமிக் என்று அழைக்கப்படும். இந்த குரங்கு அம்மை பல ஆப்ரிக்க நாடுகளில் அந்த நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவில் கேரளாவில் 3 பேர் உட்பட மொத்தம் 4 பேருக்கு இந்த குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ஒரு சந்தேக கேஸ் உள்ளது.

எப்படி பரவுகிறது?
குரங்கு அம்மை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது, குரங்கு அம்மை ஏற்பட்டவருக்கு உள்ள சொறி, சிரங்குகள் இன்னொருவருக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் குரங்கு அம்மை இருக்கும் விலங்குகளுடன் நெருக்கமாக பழகும் நபர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுவாக குரங்குகள் அம்மை காரணமாக ஏற்படும் சிரங்குகள் முகத்தில் இருந்து முகம், தோலில் இருந்து தோல், வாயிலிருந்து வாய் அல்லது வாயிலிருந்து தோல் தொடர்பு, பாலியல் உறவு வழியாக பரவும் அபாயம் உள்ளது.

யாருக்கு ஏற்படுகிறது
குரங்கு அம்மை பொதுவாக ஆண்கள் மற்றும் அடிப்படை நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக தன் பாலின உறவு கொண்ட ஆண்கள் இடையே இந்த வைரஸ் அதிகமாக பரவி இருக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படலாம். WHO இன் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கும் குரங்கு அம்மை ஏற்படும் அபாயம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அறிகுறிகள்
குரங்கு அம்மை அறிகுறிகள் பெரியம்மை அறிகுறிகளைப் போலவே இருக்கும், ஆனால் லேசானவை, மேலும் இந்த நோய் அவ்வளவு ஆபத்து கொண்டது கிடையாது. இதனால் ஏற்படும் அறிகுறிகள் பொதுவாக 14-21 நாட்களுக்குள் நீடிக்கும். குரங்கு அம்மையின் இறப்பு விகிதம் பொது மக்களில் 0 முதல் 11 சதவீதம் வரை உள்ளது. ஆனால் சிறு குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது. சமீபத்திய காலங்களில், இறப்பு விகிதம் சுமார் 3-6% ஆக உள்ளது.

காய்ச்சல்
பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான தலைவலி, வீக்கம் (கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு), முதுகுவலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும். நோயாளிகளிடம் ஒரு வித அரிப்பு தன்மை உண்டாகும். பெரும்பாலும் முகத்தில் தடிப்புகள் தோன்றும், பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இந்த தடிப்புகள் பரவும். தடிப்புகள் கொசு கடித்து போன்ற சிவப்பு புள்ளிகளாகத் தொடங்கும். போக போக வலுவான , சீழ் நிறைந்த, பெரிய புடைப்புகளாக மாறி, பின்னர் சிரங்குகளாக மாறும்.
Recommended Video

எங்கே ஏற்படும்
முக்கியமாக கைகள், பாதங்கள், தொடை பகுதிகளில் தடிப்புகள் ஏற்படும். இது சீழ் வைத்து பின்னர் சீழ் வெடித்து காய்ந்த புண்களாக மாறும். குரங்கு அம்மை ஏற்படுவதை தடுக்க முக்கியமான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதைத் தவிர்த்தல்; பாதுகாப்பான உடலுறவு கொள்தல்; உணவு பொருட்களை பகிராமல் இருப்பது, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல். உங்கள் கைகளை அடிக்கடி கழுவுதல், முக்கியமாக அறிகுறி உள்ளவர்களை சந்தித்த பின் உங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று சுத்தமான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications