இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
டெல்லி: இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 321 இடங்களில் வெற்றிபெறக் கூடும் என இந்தியா டுடே நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.
தேசத்தின் மனநிலை (Mood Of the Nation) என்ற தலைப்பில் அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
ஜனவரி 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்ட விதம், வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் உள்ளடக்கம்.

கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்ட விதம் எப்படி?
73% மக்கள் மோடி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக வாக்களிப்பு.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநில அரசுகளின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
70% மக்கள் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை குறை சொல்லவில்லை.
கொரோனா பேரிடர் காலத்தில் வருவாய் இழப்பு மற்றும் வேலையிழப்பு..?
85% மக்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பு என சர்வே கூறுகிறது.
கொரோனா கட்டுப்படுத்துதலில் பிறநாடுகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
ஆஸ்திரேலியா -94% பேர் நன்றாக செயல்பட்டது என பாராட்டு
ஜெர்மனி -88% நன்றாக செயல்பட்டதாக பாராட்டு
இந்தியா -73% சிறப்பாக செயல்பட்டது
கொரோனாவுக்கான சிகிச்சை எங்கு தரமாக கிடைக்கிறது?
61% பேர் அரசு மருத்துவமனை ஆப்ஷனை தேர்வு செய்துள்ளார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் உதவியதா?
39% பேர் மட்டுமே ஆம் என பதில் அளித்துள்ளார்கள்.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விருப்பமா?
76% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம்
விலையில்லா (இலவச)கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்கிறீர்களா?
92% பேர் ஆம் என பதிலளிப்பு
இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?
43 % பேர் தேசிய ஜனநாயக கூட்டனிக்கு வாக்களிப்போம் என பதில் - அதன் படி என்.டி.ஏ. 321 இடங்கள் வெல்ல வாய்ப்பு

27% பேர் மட்டுமே யு.பி.ஏ. கூட்டணிக்கு வாக்களிப்போம் என பதில் -அதன்படி காங்கிரஸ் கூட்டணி 93 இடங்கள் வெல்ல வாய்ப்பு
30% பேர் இதர மாநில கட்சிகளை தேர்வு செய்துள்ளனர் - அதன்படி 129 இடங்களை இதர மாநில கட்சிகள் வெல்ல வாய்ப்பு
பிரதமர் மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது?
44% பேர் நன்றாக உள்ளது என பதில்
30% பேர் மிகச்சிறப்பு என பதில்
17% பேர் சராசரியாக செயல்படுகிறார் என மதிப்பு
6% பேர் மிக மோசம் என பதில்
மொத்தம் 12, 332 நபர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மேற்கண்ட கேள்விகளுக்கு இத்தகைய பதில் கிடைத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications