நபிகள் நாயகம் சர்ச்சை.. வரிசை கட்டி நிற்கும் இஸ்லாமிய நாடுகள்! பெரும் சிக்கலில் இந்தியா?
டெல்லி: நபிகள் நாயகம் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து வரும் சூழலில் இந்த விவகாரத்தில் மேலும் சில இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பி உள்ளன.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்தவர் பாஜக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த நுபுர் சர்மா. குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து கூறி வந்தார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நுபர் சர்மா இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video

சம்மன்
அவரது பேச்சைக் கண்டித்து உத்தரப் பிரதேசம் கான்பூரில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 40 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்த நிலையில், விவகாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. முதலில் கத்தார், குவைத் போன்ற அரபு நாடுகள் இந்தியத் தூதர்களுக்கும் சம்மன் அனுப்பின. அவர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தின.

திரளும் இஸ்லாமிய நாடுகள்
நபிகள் நாயகம் விவகாரத்தில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகிறது. கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என் வலியுறுத்தி உள்ளன. இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க வெளியுறவுத் துறை முக்கிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில நாடுகள்
இந்த விவகாரத்தில் ஜோர்டானும் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜோர்டான் இத்தகைய கருத்துகளைக் கண்டிப்பதாகவும் இஸ்லாமிய மற்றும் பிற மத பிரமுகர்களுக்கு எதிரான கருத்துகளை உறுதியாக நிராகரிப்பதையும் அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் தூதர் ஹைதம் அபு அல்ஃபோல் தெரிவித்தார். அதேபோல இந்தோனேசியாவும் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகளின் ஏற்றுக்கொள்ள முடியாத கீழ்த்தரமான கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக இந்தோனேசியா தரப்பில் கூறப்பட்டுள்ளது

என்ன செய்ய வேண்டும்
டெல்லியில் உள்ள கத்தார் தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகையில், "மோடி அரசு இந்த விவகாரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். எங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவது பொருளாதார உறவுகளை நேரடியாகப் பாதிக்கும்" என்று கூறியுள்ளார். இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நபிகள் நாயகம் குறித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அனைத்து மதங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் வெறுப்புப் பேச்சு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது.

விளக்கம்
மேலும், வளைகுடா நாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோஷமும் சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளது. இதையடுத்து வெளியுறவுத் துறை இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட நபர்களின் கருத்து, எந்த வகையிலும் அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அதை அரசின் ஒட்டுமொத்த கருத்தாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

உறவு
குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (ஜிசிசி) இந்தியாவின் வர்த்தகம் 2020-21ல் சுமார் 90 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்த இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இந்த சர்ச்சையால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக
இந்த விவகாரத்தில் பாஜக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்த நுபுர் சர்மா ஏற்கனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அதேபோல நவீன் ஜிண்டால் நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது குறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் செயல்களை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. அத்தகைய நடவடிக்கையைக் கட்சி ஊக்குவிப்பதில்லை" என்று கூறி உள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications