“ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளோம்”.. முப்படை தளபதிகள் விளக்கம்
டெல்லி: "பயங்கரவாதிகளை மட்டும்தான் தாக்கினோம் என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளோம் பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை தெரிவித்துள்ளோம்" என லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வந்த கடுமையான மோதல், நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சண்டை நிறுத்தம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாட்டு எல்லை பகுதிகளிலும் அமைதி திரும்பி வருகிறது. இரவில் சில அத்துமீறல்கள் இருந்தாலும் பெரிதாக சண்டை நடக்கவில்லை. இதனால் 3 நாள் சண்டை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் டெல்லியில் இன்று, ஆபரேஷன் சிந்தூர் குறித்து முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ராஜீவ் கய், "பயங்கரவாத கட்டமைப்புகளை தகர்க்கவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
மிகவும் ஆபத்தான தீவிரவாத முகாம்களை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அவை அனைத்தும் அழிக்கப்பட்டது. அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கிய பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
அதன் மூலம், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவ்ப், முடாசிர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குருத்வாரா, கோயில்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் பலியாகியுள்ளனர். எங்களுடைய மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications