"மனைவியும் வேண்டும்.. காதலியும் வேண்டும்.." அந்தரங்க செயலியில் 20 லட்சம் இந்தியர்கள்! அடக்கொடுமையே
டெல்லி: இந்தியாவில் திருமணத்திற்கு வெளியே உறவில் இருக்க வேண்டும் என விரும்பும் நபர்கள் பயன்படுத்தும் செயலியின் வளர்ச்சி வேகமாக அதிகரித்துள்ளது. இந்தாண்டு மட்டும் சுமார் 20 லட்சம் பேர் திருமண உறவில் இருந்து கொண்டே திருமணத்திற்கு வெளியே மற்றொரு துணையைத் தேட இந்த செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
கணவன்- மனைவி இடையேயான உறவில் இப்போது பலருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டே வருகிறது. பல்வேறு காரணங்களால் கணவன்- மனைவி இடையேயான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
கணவன்- மனைவி என இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல தயாராக இருப்பதில்லை என்பதால்.. சிறு சிறு மோதல்களும் கூட விவகாரத்து வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நீதிமன்றங்களுக்குச் சென்றால் இதை நாம் தெளிவாகப் பார்க்க முடியும்.

டேட்டிங்
இது ஒரு பக்கம் இருக்க இந்த டிஜிட்டல் உலகில் எல்லாமே இணையம் என்றாகிவிட்டது. ஷாப்பிங்க முதல் டேட்டிங் வரை அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக டேட்டிங் செயலி கடந்த சில ஆண்டுகளாக மிக பெரியளவில் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இணையத்தில் காதலைத் தேடுவோருக்கு டின்டர், பம்பிள் என்று என்று ஏகப்பட்ட செயலிகள் இப்போது உள்ளன. இந்த செயலிகளின் உதவியுடன் நமக்கு ஏற்ற இணையை நம்மால் தேர்வு செய்து கொள்ள முடியும். பாலினம் தொடங்கி வயது, இருப்பிடம் என்று டேட்டிங் செயலியிலேயே ஏகப்பட்ட வகைகள் உள்ளன.

க்லீடன்
அதில் ஒரு வினோதமான செயலி தான் க்லீடன் (Gleeden).. ஏற்கனவே திருமணமானவர்கள்.. திருமணத்திற்கு வெளியே உறவில் இருக்க வேண்டும் என விரும்பினால்.. அவர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.. இந்த செயலியைப் போய் யார் பயன்படுத்துவார்கள் என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால், உண்மையில் இந்த செயலி சில காலமாகவே ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறதாம். பிரான்ஸ் நாட்டவர் உருவாகிய இந்த செயலி அங்கு மட்டுமில்லை.. இந்தியாவிலும் ஹிட் அடித்துள்ளது என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.

20 லட்சம் இந்தியர்கள்
திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுக்கான இந்த க்லீடன் செயலியில் இப்போது உலகெங்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ளனர். அதில் 20% பயனாளர்கள்.. அதாவது 20 லட்சம் பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவலை அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதாவது ஏற்கனவே திருமணமான 20 லட்சம் இந்தியர்கள், திருமண உறவில் இருந்து கொண்டே திருமணத்திற்கு வெளியே மற்றொரு துணையைத் தேட இந்த செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் ஏதோ குறிப்பிட்ட வளர்ந்த நகரங்களில் இருப்போர் மட்டுமே இந்த செயலியைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.

எங்கு அதிகம்
20 லட்சம் இந்தியர்களில் 66% பேர் வளர்ந்த நகரங்களைச் சேர்ந்தவர்கள். அதேநேரம் மற்ற 44% பேர் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஷாக் தகவலாகும். இது குறித்து க்லீடன் செயலியின் இந்திய பிரிவு மேனேஜர் சிபில் ஷிடெல் கூறுகையில், "இந்தியா திருமணங்களையும் ஒருவர் ஒருவருடன் தான் உறவில் இருக்க வேண்டும் என்பதை மிகவும் சீரியாக எடுத்துக் கொள்ளும் ஒரு நாடு. இங்குக் கடந்த ஓராண்டில் 18% புது பயனாளர்கள் கிடைத்துள்ளனர். இப்போது சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எங்கள் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள்
இந்தியாவில் எங்கள் வளர்ச்சி அதிகரித்து வருவது.. மாறிவரும் சமூக சிந்தனைகளைக் காட்டுகிறது.. இப்போது எங்கள் செயலியில் பொருளாதார ரீதியாகச் செல்வாக்கானவர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர், மருத்துவர்கள் போன்ற நிலையில் உள்ளவர்கள் தான் இந்தியாவில் எங்கள் செயலிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. அதேபோல குடும்பத் தலைவிகளும் கணிசமாக இந்த செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

வயது வாரியாக
இந்தியாவில் திருமணமான ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருமே இந்த செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலியைப் பயன்படுத்தும் ஆண்கள் பலரும் 30 வயதைக் கடந்தவர்கள். அதேபோல பெண்கள் பெரும்பாலானோர் 26 வயதைக் கடந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செயலி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications