Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மசூதி".. முஸ்லிம்களுக்கு செக்.. 4-ம்தேதி இருக்கு.. ஸ்பீக்கர்களை அகற்ற "கெடு" வைத்த ராஜ்தாக்கரே..!

மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற ராஜ்தாக்கரே கெடு விதித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை மே 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ராஜ் தாக்கரே கெடு விதித்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம், ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து, மசூதிகளில் ஒலிபெருக்கி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2-ம்தேதி நடந்த குடிபட்வா பொது கூட்டத்தில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசும்போது, மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றும், மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றவில்லையெனில், அதன் அருகே நவநிர்மாண் சேனாவினர் ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடல்களை ஒலிப்பார்கள் என்றும் அறிவித்திருந்தார்..

ஒலிபெருக்கி

ஒலிபெருக்கி

இதையடுத்து சில நவநிர்மாண் சேனாவினர் பொது இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்த சம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறின.. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்வினையாற்றி வருகினற்ன.. "சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தி விலைவாசி உயர்வு போன்ற மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுகின்றன. எந்த மதத்தை பின்பற்றவும் எல்லோருக்கும் உாிமையை அரசியல் சாசனம் வழங்கி உள்ளது.

மசூதிகள்

மசூதிகள்

சமூக பிரச்சினையை ஏற்படுத்தும் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்க கூடாது. பிரார்த்தனை செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றெல்லாம் கருத்து கூறி வருகிறார்கள். இதனிடையே, மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை மே 1ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ராஜ்தாக்கரே கேட்டுக் கொண்டிருந்தார்.. அதன்படி, மும்பையில் உள்ள 72 சதவீத மசூதிகளில் காலை தொழுகை அல்லது பிரார்த்தனைக்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்தன.

 பிரார்த்தனை

பிரார்த்தனை

இந்நிலையில், மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே உரையாற்றும்போது, ஒலிபெருக்கிகளை அகற்ற புதிய கெடு வைத்துள்ளார்.. அப்போது அவர் பேசியதாவது: "மசூதிகளில் தொந்தரவாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன்... முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. இது மத பிரச்சினை கிடையாது, இது ஒரு தேசிய பிரச்சினை.

மசூதிகள்

மசூதிகள்

எல்லா ஒலிபெருக்கிகளும் சட்டவிரோதமானது என்று சுப்ரீம்கோரட் ஏற்கனவே சொல்லி இருக்கிறது.. அதனால், மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கெல்லாம் நான் பொறுப்பு கிடையாது.. முஸ்லிம்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு மகாராஷ்டிராவின் பவர் என்னவென்று காட்டுவோம்... அதனால், ஒலிபெருக்கிகளை உடனே அகற்றுமாறு போலீசாரை கேட்டுக்கொள்கிறேன்.

 சால்சா பாடல்கள்

சால்சா பாடல்கள்

ஒருவேளை அவர்கள் எங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால், நாங்களே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்போம்.. உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிறபோது, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அவ்வாறு செய்வதைத் தடுப்பது எது என்று தெரியவில்லை.. மே 4 முதல் அனைத்து இந்துக்களும் ஹனுமான் சாலிசா பாடல்களை, மசூதி ஒலிப்பெருக்கிகளின் அளவை விட இரட்டிப்பாக ஒலிக்கச் செய்ய வேண்டும்" என்றார். ராஜ்தாக்கரேவின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+