"குட்டை பாவாடை!" மொட்டை மாடியில் இளைஞருடன் மகள் செய்த காரியம்! செருப்பை எடுத்துகொண்டு துரத்திய அம்மா
காதலர் தின கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
டெல்லி: காதலர் தினத்தை வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாகப் பல இளைஞர்களும் கொண்டாடினர். அப்படி பெண் ஒருவர் சீக்ரெட்டாக காதலர் தினத்தைக் கொண்டாட அது விபரீதத்தில் முடிந்துள்ளது.
கடந்த பிப். 14ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பொதுவாகக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மிக கோலாகலமாக இருக்கும்.
அந்தளவுக்கு இந்தியாவில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இருக்காது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினக் கொண்டாட்டம் அதிகரித்தே வருகிறது. நகரங்களில் அதிகமாகவே இருக்கிறது.

காதலர் தினம்
அதேநேரம், சில குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் காதலர் தினத்தைக் கொண்டாட்டங்கள் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. காதலையே இன்னும் கூட நம் நாட்டில் பல பெற்றோர் ஏற்காத நிலையில், காதலர் தினக் கொண்டாட்டங்களை மட்டும் எப்படி ஏற்பார்கள்.. காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள் கடந்த காலங்களில் காதலர் தினத்தன்று கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று அத்துமீறித் தாக்கிய சம்பவங்கள் எல்லாம் கூட நடந்துள்ளது.

அரவணைப்பு தினம்
முன்னதாக சமீபத்தில் இந்திய விலங்குகள் நலவாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "பசு நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பது அனைவருக்கும் தெரியும். பசுக்கள் வாழ்வாதாரத்தை நீடிக்கிறது. ஒரு தாயைப் போல அது இருப்பதாலேயே காமதேனு' என்றும் கோமாதா' என்றும் அழைக்கிறோம். மேற்கத்தியக் கலாச்சாரத்தில் வேத மரபுகள் அழிந்து வருகிறது. திட்டமிட்டு இதை அழித்து வருகிறார்கள்.. எனவே, பசு பிரியர்கள் அனைவரும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தின'மாக (Cow Hug Day) கொண்டாட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

எதிர்ப்பு
இது இணையத்தில் மிகப் பெரியளவில் பேசுபொருளானது. இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பை விலங்கு நல அமைப்பு வாபஸ் பெற்றது. இது ஒரு பக்கம் இருக்கக் காதலர் தினத்தன்று இளம் ஜோடி செய்த காரியம் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நமது நாட்டில் பல இளைஞர்கள் பெற்றோருக்குப் பயந்து காதலை ரகசியமாகவே வைத்துக் கொள்வார்கள். இதன் காரணமாகக் காதலர் தினக் கொண்டாட்டங்களும் கூட ரகசிமயாகவே இருக்கும்.

காதலர் தின கொண்டாட்டம்
அப்படி தனது காதலனுடன் ரகசியமாகக் காதலர் தினத்தைக் கொண்டாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி தான் இப்போது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதாவது அந்த பெண் காதலர் தினத்தன்று தனது காதலனை மொட்டை மாடியில் சந்தித்துள்ளனர். அங்கேயே காதலர் தினத்தையும் அவர்கள் கொண்டாடி உள்ளனர். சரியாக அப்போது என்று பார்த்து அந்த பெண்ணின் அம்மா மாடிக்கு வந்துவிட அவர்கள் கையும் களவுமாக மாடிக் கொண்டனர்.

குட்டை பாவாடை
அடுத்து அங்கு நடந்த சம்பவங்களைத் தான் பக்கத்தில் வீட்டில் இருந்து ஒருவர் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வெள்ளை நிற குட்டை பாவாடை அணிந்துள்ள அந்த பெண், அம்மா மேலே வருவதைப் பார்த்தவுடன் அந்த பெண் காதலனை ஒளிய வைத்துவிட்டார்.. ஆனால், வீடியோ எடுத்த நபர் பெண்ணின் காதலன் எங்கே இருக்கிறான் என்பதைப் போட்டுக் கொடுத்துவிட்டதாகவே ஆடியோவில் கேட்கிறது.

அம்மா கொடுத்த தண்டனை
பயத்தில் ஒளிந்து கொண்டிருந்த அந்த இளைஞனைப் பெண்ணின் அம்மா வெளியே கூட்டி வந்தார். அந்த இளைஞன் ஏதோ சொல்ல வர.. அதைக் கேட்காமல் அம்மா செருப்பைக் கழட்டி அடிக்க தொடங்கிவிட்டார். இதனால் அவர் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார். இதையடுத்து அந்த பெண் தனது மகளின் பக்கம் திரும்புகிறார். அம்மா கிட்ட வரவே.. தன்னை மன்னித்துவிடும்படி அந்த பெண் கைகளைக் கூப்பியபடி கெஞ்சுகிறார்.

ஷாக் சம்பவம்
இருப்பினும், தனது மகளையும் அந்த பெண் செருப்பால் அடிக்க தொடங்கிவிட்டார். அத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகின்றனர். காதலனுடன் தனியாக இருந்த அந்த பெண்ணுக்கு இந்த தண்டனை ஓவர் என்று சிலரும் சரியான தண்டனை தான் என்று சிலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications