கலர் பாமால் நாடாளுமன்றமே கதிகலங்கிய நேரத்தில்.. இந்த எம்பி செய்வதை பாருங்க! உங்க கடமை உணர்ச்சிக்கு
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது கலர் புகை குண்டுகளுடன் அவைக்குள் குதித்து இருவர் கலாட்டா செய்த பரபரப்பான சமயத்தில் எம்பி ஒருவர் செய்த செயல் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டிசம்பர் 13 ஆம் தேதியான இன்று இந்திய நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட தினமாகும். இதன் 22 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மக்களவையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சித் தலைவர்கள்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதை தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடரில் எம்பிக்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது மக்களவையில், மேற்கு வங்க மாநில பாஜக எம்பி ககன் முர்மு பேசிக்கொண்டு இருந்தபோது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து இருந்த இளைஞர் ஒருவரும் மற்றும் பெண் ஒருவரும் திடீரென அவைக்குள் குதித்தனர். அவர்கள் தங்களது கைகளில் மஞ்சள் நிற புகையை கக்கும் ஒரு பொருளை வைத்து இருந்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் எம்பி முர்மு பேச்சை நிறுத்திவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில வினாடிகள் திகைத்துப்போன நிலையில் அந்த ஆணும் பெண்ணும் எம்பிக்கள் அமர்ந்து இருக்கும் இருக்கைகளில் குதித்து தாவி தாவி சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடினர். அவர்கள் கைகளில் வைத்து இருந்த புகையால் மக்களவை அரங்கமே மஞ்சள் புகையால் சூழ்ந்தது. இதனால் எம்பிக்கள் அனைவரும் இருக்கைகளை விட்டு எழுந்து வெளியேறத் தொடங்கினர். இந்தியாவின் தலைமை பீடமாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு கட்டமைப்புகளை மீறி அவைக்குள் குதித்த இருவரையும் காவலர்கள் கைது செய்து உள்ளனர். கைதான பெண்ணின் பெயர் நீலம் (வயது 42) என்று அவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆணின் பெயர் அமோல் ஷிண்டே (வயது 25) மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் யார்? என்ன காரணத்துக்காக இவ்வாறு செய்தார்கள் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். இதனால் சில நிமிடங்கள் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்ட நிலையில் அந்த புகை தீங்கு விளைவிக்கக் கூடியது இல்லை என்று கூறி மீண்டும் அவையை தொடங்கினார் சபாநாயகர் ஓம் பிர்லா.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், ஒரு புகைப்படங்களில் டிரெண்டாகி உள்ளது. அதில் புகை மூட்டத்தில் இருக்கும் மக்களவையில் எம்பிக்கள் அனைவரும் எழுந்து நின்றுகொண்டு இருந்த சமயத்தில் ஒரே ஒரு எம்பி மட்டும் எதையுமே கண்டுகொள்ளாமல் தனது பையில் ஆவணங்களை எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார். இதனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கருத்திட்டு வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications